/* */

குப்பாண்டபாளையம் ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குப்பாண்டபாளையம் ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
X

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், ஈரோடு சேவ் சைட் பவுண்டேசன், குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்றம் சார்பில் பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தில் ஊராட்சி தலைவர் கவிதா தலைமையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

ஈரோடு அரசன் கண் மருத்துவமனை தலைமை டாக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் சிகிச்சை செய்தனர். இதில் தூரப்பார்வை, கிட்டப்பார்வை, கண்ணில் புரை, கண் வீக்கம், உள்ளிட்ட பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

குப்பாண்டபாளையம், சானார்பாளையம், பூலக்காடு, என்.ஜி.ஆர். நகர், குளத்துகாடு, டீச்சர்ஸ்காலனி உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 19 பேர் ஐ.ஒ.எல். பொருத்தப்படும் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றிய கவுன்சிலர் தனசேகரன், ஊராட்சி துணை தலைவர் புனிதா, நிர்வாகி வேலுமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 14 April 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?