/* */

விமான அலகு குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

குமாரபாளையம் காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விமான அலகு குத்தியபடி வந்தனர்.

HIGHLIGHTS

விமான அலகு குத்தியபடி நேர்த்திக்கடன்   செலுத்திய பக்தர்கள்
X

குமாரபாளையம் காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விமான அலகு குத்தியபடி வந்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காளியம்மன் கோவில் மகா குண்டம், தேர்த்திருவிழா நடந்து வருகிறது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்ற குண்டம் இறங்குதல், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல் என பல வழிகளில் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள்.

அழகு குத்துதலில் நாக்கில் அலகு குத்துதல், பக்கவாட்டில் அழகு குத்துதல், நீளமான அலகை கன்னங்களில் குத்துதல், மற்றும் முதுகில் அலகு குத்திக்கொண்டு தொங்கியபடி வரும் விமான அலகு என பல வகைகளில் வேண்டுதல் நிறைவேற்றி வருகிறார்கள். நேற்று ஏராளமான பேர் விமான அலகு குத்தியபடி, கிரேன் உதவியுடன் தொங்கியபடி வந்தனர். பேண்டு வாத்தியங்கள் முழங்க, ஆட்டம் ஆடியவாறு பக்தர்கள் ஆடி வர, விமான அலகு குத்தியபடி பக்தர்கள் வந்ததை. சாலையின் இரு புறமும் பொதுமக்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர். இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் பக்தர்களை விரைவில் செல்ல அறிவுறுத்தி, போலீசார் போக்குவரத்தை சீர்படுத்தினர். அனைத்து காளியம்மன், மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பல்வேறு கோவில்களில் இன்னிசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பொதுமக்கள் இந்த கலை நிகழ்சிகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Updated On: 28 Feb 2024 4:15 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  6. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  9. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  10. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...