/* */

குமாரபாளையம் மேம்பால கட்டுமான வளைவில் ஆபத்தான முறையில் பேனர்கள்

குமாரபாளையம் கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பால கட்டுமான வளைவில் ஆபத்தான முறையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

குமாரபாளையம் மேம்பால கட்டுமான வளைவில் ஆபத்தான முறையில் பேனர்கள்
X

ஆபத்தான முறையில் வைக்கப்பட்டுள்ள பேனர்.



 


நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்காக சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆனால் கத்தேரி பிரிவு சர்வீஸ் சாலை வளைவு பகுதியில் பிளெக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்கள், கடை விளம்பரங்கள் என ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், வாகனங்கள் செல்ல பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்று ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கால விரயம், எரிபொருள் விரயம் ஏற்படுவதுடன், வழக்கமாக இந்த வழியில் அன்றாட வேலைக்கு செல்பவர்கள், வட்டமலை, எதிர்மேடு பகுதியில் உள்ள எண்ணற்ற கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர், குமாரபாளையம் ஜவுளி உற்பத்திக்கு தேவையான நூல்களை ஏற்றி வரும் லாரிகள், இதர கடைகளுக்கு சாமான்கள் ஏற்றிவரும் சரக்கு வாகனங்கள், சேலம், திருச்செங்கோடு, சங்ககிரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் பேருந்துகள் குமாரபாளையம் நகரிலிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள், என பலதரப்பட்ட வாகனங்கள் செல்ல பெரிதும் சிரமம் ஏற்படுகிறது.

இந்த பகுதியில் இருபுற சர்வீஸ் சாலையில் எந்த போக்குவரத்து போலீசாரும் நின்று போக்குவரத்து சரி செய்வது இல்லை. ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் நிலை மாற, உடனே இந்த இருபுற சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், போக்குவரத்து போலீசார் சிப்ட் முறையில் செயல்பட்டு, இரவு பகலாக போக்குவரத்து சீர் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இடையூராக இருக்கும் பேனர்கள் அகற்றப்பட்டு, இங்கு பேனர்கள் வைக்க தடை விதிக்க வேண்டும்.

Updated On: 22 April 2024 11:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...