/* */

குமாரபாளையத்தில் வழக்கறிஞர் சங்க முப்பெரும் விழா

குமாரபாளையத்தில் வழக்கறிஞர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் வழக்கறிஞர் சங்க  முப்பெரும் விழா
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற வழக்கறிஞர் சங்க முப்பெரும் விழாவில்,  மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சப்னா ஆகியோர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில், சங்க மூன்றாமாண்டு துவக்க விழா, நீதிபதிகளுக்கு உபசார விழா, வருடாந்திர பொதுக்குழு விழா ஆகிய முப்பெரும் விழா சங்க தலைவர் சரவணராஜன் தலைமையில் நடைபெற்றது.

சேமநல நிதியை 7 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தல், குமாரபாளையத்தில் புதிய சார்பு நீதிமன்றம் அமைக்க உயர்நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் பரிந்துரை செய்திட கோரிக்கை விடுத்தல், குமாரபாளையத்தில் நிரந்திர நீதிமன்ற கட்டிடம் அமைக்க கோரிக்கை விடுத்தல், குமாரபாளையம் தாலுக்காவில் கருவூலம் அமைக்க கோரிக்கை விடுத்தல், என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சப்னா ஆகியோருக்கு மாலைகள், சால்வைகள் அணிவித்து கவுரவப்படுத்தப்பட்டது. இருவரும் ஏற்புரை நிகழ்த்தினர். சங்க செயலர் நடராஜன், பொருளாளர் நாகப்பன் உள்ளிட்ட முன்னாள், இந்நாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Updated On: 27 April 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு