/* */

குமாரபாளையம் அருகே கரும்பு லோடு கட்டு அவிழ்ந்து சாலையில் கொட்டிய கரும்புகள்

குமாரபாளையத்தில் கரும்பு லோடு கட்டு அவிழ்ந்து சாலையில் கொட்டிய கரும்புகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே கரும்பு லோடு கட்டு அவிழ்ந்து சாலையில் கொட்டிய கரும்புகள்
X

குமாரபாளையத்தில் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் கரும்பு லோடு கட்டு அவிழ்ந்து சாலையில் கொட்டிய கரும்புகள்

குமாரபாளையத்தில் கரும்பு லோடு கட்டு அவிழ்ந்து சாலையில் கொட்டிய கரும்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.டிராக்டர் ஓட்டுனர் தப்பியோடினார்.

குமாரபாளையம் சேலம் சாலை, பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் நேற்று இரவு 08:30 மணியளவில், கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. பிரிவு சாலை பகுதியில் கரும்பு லோடு கட்டு அவிழ்ந்து, கரும்புகள் சாலையில் கொட்டின. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போது, டிராக்டர் ஓட்டுனர் யாரும் இல்லாததும், அங்கிருந்து தப்பியோடிவிட்டதும் தெரிய வந்தது. கரும்புகள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாகனங்கள் செல்லும் வகையில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. டிராக்டர் உரிமையாளர் குறித்தும், விட்டுவிட்டு ஓடிய ஓட்டுனர் குறித்தும் குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவிரி ஆற்றுக்கு சாக்கடை கழிவு நீர் செல்லும் வகையில் உள்ள,பழைய சாக்கடை கால்வாய் இடிக்கப்பட்டு, தற்போது நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக சாக்கடை கால்வாய் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளிபாளையம் காவல் நிலையம் அருகே உள்ள சாக்கடை இடிக்கப்பட்டு, தற்போது அங்கு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பள்ளிபாளையம் காவல் நிலைய சாலை உள்ளே ஆவரங்காடு பகுதி அதிக மக்கள் உள்ள பகுதி என்பதாலும், ஊரின் மையப் பகுதியாக இருப்பதாலும் அதிகளவு அவ்வழியே வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் திருச்செங்கோட்டில் இருந்து மாற்று பாதையில் வரும் வாகனங்கள், ஆவரங்காடு பகுதியில் இருந்து காவல் நிலையம் சாலை வழியாக ஈரோடு உள்ளிட்ட பிற ஊர்களுக்கு சென்று வருகிறது.

இந்நிலையில், பள்ளிபாளையம் காவல் நிலையம் அருகே குறுகிய சாலையில், வாகனங்கள் எதிர்திசையில் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதால், சுபாஷ் நகர் என்ற பகுதி அருகே ஒரு வழி பாதையாக வாகனங்கள் செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, திருச்செங்கோடு சாலையிலிருந்து வாகனங்கள் சுபாஷ் நகர் வழியாக சென்று பள்ளிபாளையம் காவிரி பாலம் அருகே உள்ள மாற்று வழியில் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஈரோட்டில் இருந்து ஒரு வாகனங்கள் எப்போதும் போல காவல் நிலைய சாலையிலிருந்து வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு பெரும் பகுதி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 14 Feb 2024 4:19 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்