வேதாரண்யத்தில் அம்மா உணவக பணியாளர்கள் திடீர் பணி நீக்கம், தற்கொலைக்கு முயற்சி

வேதாரண்யத்தில் அம்மா உணவக பணியாளர்கள் திடீர் பணி நீக்கம் செய்யப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வேதாரண்யத்தில் அம்மா உணவக பணியாளர்கள் திடீர் பணி நீக்கம், தற்கொலைக்கு முயற்சி
X

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அம்மா உணவகத்தில் பணியாற்றிய சமையலர்கள், திடீர் பணி நீக்கம் செய்யப்பட்டதால், தற்காலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேல் அமமா உணவகம் நடைபெற்று வந்தது. அம்மா உணவகத்தில் வெற்றிச்செல்வி, தமிழ் செல்வி, கமலா ஆகியோர்கள் சமையலராக பணியாற்றி வந்தனர்.

வழக்கம் போல் பணிக்கு வந்தனர். அங்கு பணியில் இருந்த அம்மா உணவக பெண் ஊழியர் நீங்கள் இனிமேல் பணிக்கு வர வேண்டாம், ஏற்கனவே பணி வேண்டாம் என்று கூறி கடிதம் எழுதி கொடுத்து உள்ளீர்கள் ஆகவே இனிமேல் நீங்கள் பணிக்கு வர வேண்டாம் என நகராட்சி மேலாளர் தெரிவித்துள்ளார் என அந்த பெண் ஒருவர் தெரிவித்தார்.

அந்த மூன்று பெண் ஊழியர்களும் திடீரென்று என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் நின்றனர். உடனடியாக எங்களுக்கு பணி வழங்க வேண்டும் எனவும் இல்லை என்றால் நாங்கள் மூவரும் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்துகொள்வோம் எனவும் தெரிவித்தனர். இனதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 27 May 2021 3:13 AM GMT

Related News