/* */

திருமங்கலம் பிரதானக் கால்வாய் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

மதுரை அருகே திருமங்கலம் பெரியாறு பிரதானக் கால்வாய் சீரமைக்க இப் பகுதி விவசாயிகள் கோரிக்கை.

HIGHLIGHTS

திருமங்கலம் பிரதானக் கால்வாய் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
X

கால்வாய் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

மதுரை அருகே திருமங்கல பெரியாறு பிரதானக் கால்வாயை சீரமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்

முதல் போக நெல் சாகுபடிக்கு பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்கும் நிலையில் விக்கிர மங்கலத்தில் உள்ள திருமங்கலம் பிரதான பாசன கால்வாயை மராமத்து பார்க்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது திருமங்கலம் பிரதான கால்வாய்.

இக்கால்வாய் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பேரணையிலிருந்து அதாவது அணை பட்டியில் இருந்து திறந்துவிடப்படும். தண்ணீர் திருமங்கலம் பிரதானக் கால்வாய் மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்றது. ஆனால்,தண்ணீர் திறந்து விடப்படுவதால், திருமங்கலம் பாசன கால்வாய் மூலம் பெறப்படும். தண்ணீர் இன்று உள்ள சுமார் 40,000 ஏக்கர் பாசனத்திற்கு போதுமானதாக இல்லை என்று இந்தப் பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் .

இதுகுறித்து, விவசாயிகள் மூக்கன் சீராளன் கூறியதாவது திருமங்கலம் பிரதான கால்வாய் காங்கிரஸ் ஆட்சி இருக்கும்பொழுது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிரதான கால்வாய் கட்டப்பட்டு சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விவசாயத்திற்கு பாசன வசதி ஏற்படுத்திக் கொடுத்தனர் .

இதனால், விக்கிரமங்கலம், அய்யனார்குளம், சடச்சிபட்டி நாடா பட்டி , நாட்டாமங்கலம், உச்சப்பட்டி, குப்பனும் பட்டி, அம்பட்டையன் பட்டி , திடியன், வாகைகுளம், உள்பட சுமார் 50 கிராமங்களுக்கு மேற்பட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் பயன் அடைந்தனர்.

ஆனால், காலப்போக்கில் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக விக்கிரமங்கலம் அருகே விரிவாக்க வாய்க்கால் ஏற்படுத்தியதால் முறையாக விவசாயிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் முழுமையாக சென்றடையவில்லை. இதனால் விரிவாக்க வாய்க்காலில் வரக்கூடிய தண்ணீர் பிரிந்து செல்வதால் தும்மக்குண்டு வரை விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை .

மேலும் , கால்வாய் முழுவதும் புதர் மண்டி கிடப்பதால் மராமத்து வேலை பார்த்து கடை மடை வரை சென்று விவசாயிகளுக்கு பயன் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

இதனால் , திருமங்கலம் பிரதான கால்வாயை அகலப்படுத்தி பாசனத்திற்கு தண்ணீர் கூடுதலாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 4 Jun 2021 6:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  4. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  5. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  6. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  8. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  9. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  10. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...