/* */

மதுரை அருகே கோழி பண்ணையில் தீ விபத்து: 100க்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழப்பு

செக்கானூரணி அருகே மின்கசிவு காரணமாக. தனியார் கோழி பண்ணையில் தீ விபத்து: நூற்றுக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழப்பு.

HIGHLIGHTS

மதுரை அருகே கோழி பண்ணையில் தீ விபத்து: 100க்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழப்பு
X

செக்கானூரணி அருகே தனியார் கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழந்தன.

செக்கானூரணி அருகே மின்கசிவு காரணமாக. தனியார் கோழி பண்ணையில் திடீரென தீ விபத்து: நூற்றுக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் உயிரிழந்த பரிதாபம்:

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே பன்னியான் பிரிவு சிவதானபுரம் என்ற இடத்தில் மாயழகன் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த கோழி பண்ணையில், இரண்டு கூரை அமைக்கப்பட்டு சுமார் 4500க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் மின்சாரம் தடைபட்டது. தொடர்ந்து, மின்சாரம் வந்த போது அதிக மின் அழுத்தம் காரணமாகவும் மின் கசிவு ஏற்பட்டதால், திடீரென தீ பற்றி மளமளவென்று எரிந்தது.

இதனால், அங்கு பணியில் இருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர். தொடர்ந்து, சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து தீயை அணைத்தனர். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் இறந்தன. கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் ஆங்காங்கே மின்கசிவு ஏற்பட்டு பொருட்கள் சேதம் அடைந்து வருவது பொதுமக்கள் மத்தியில் ஒருவித கிலியை ஏற்படுத்தி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும், கறிக்கோழி வளர்ப்பவர்கள் ஏற்கனவே, நலிவடைந்து வரும் நிலையில் இதுபோன்ற விபத்துகளால் மேலும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், கறிக்கோழி வளர்ப்பு நல வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 28 April 2022 8:22 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...