/* */

மதுரையில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து வானதி சீனிவாசன் பிரச்சாரம்

மதுரையில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து வானதி சீனிவாசன் பிரச்சாரம் செய்தார்.

HIGHLIGHTS

மதுரையில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து வானதி சீனிவாசன்  பிரச்சாரம்
X

மதுரையில் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து வானதி சீனிவாசன் பிரச்சாரம் செய்தார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக வானதி சீனிவாசன் வாக்கு சேகரித்தார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளராக பேராசிரியர் ராம சீனிவாசன் போட்டியிடுகிறார்.இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பாராளுமன்ற வேட்பாளர் பேராசிரியர் இராம சீனிவாசனை ஆதரித்து மதுரை விளக்குத்தூண் அருகே ஆரம்பித்து காமராஜர் சாலை வழியாக மாரியம்மன் தெப்பக்குளம் வரை பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தில் அன்னை மீனாட்சியின் தாமரையை மதுரையில் மலர செய்து மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்களை பெற்றிட வேண்டுகிறோம் எனவும் மற்ற திமுக, அதிமுக எம்பி வேட்பாளர் உங்களிடம் ஓட்டுக் கேட்க வந்தால் உங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என கேளுங்கள் பிறகு நாங்கள் ஓட்டு போடுகிறோம் எனக் கூறச் சொன்னார். எனவே, எந்த பிரயோசனமும் இல்லாமல் மத்திய அரசின் தேர்தலை சந்திக்க தயாராக உள்ள அதிமுக திமுக வேட்பாளர்களை புறக்கணிக்க வேண்டுமாறு கேட்டுக் கொண்டார்.

இதில், மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், துணைத் தலைவர் ஜோதி மணிவண்ணன், பொதுச் செயலாளர் கருட கிருஷ்ணன், சந்தோஷ் சுப்பிரமணி டி எம் பாலகிருஷ்ணன் பொருளாளர் நவீன் கால் சென்டர்சாம் சரவணன், வக்கீல் முத்துக்குமார் மற்றும் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் வேல்பாண்டியன், மகளிர் அணி மாவட்டதலைவி ஓம் சக்தி தனலட்சுமி தலைமையில் ஆயிரக்கணக்கான மகளிர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 April 2024 10:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  3. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  4. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  5. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  6. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  7. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  8. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  9. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  10. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!