/* */

திருமங்கலம் 7வது வார்டு அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 7வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவி அதிமுக சார்பில் V.fish.முருகன் தீவிர வாக்கு பிரச்சாரம்.

HIGHLIGHTS

திருமங்கலம் 7வது வார்டு அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

திருமங்கலம் நகராட்சி 7வது வார்டு அதிமுக வேட்பாளர் V.fish முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி நகர மன்ற 7வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் V.fish முருகன் தீவிர பிரச்சாரம்.

திருமங்கலம் நகராட்சி 7வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் V.fish முருகன் போட்டியிடுகிறார். திருமங்களம் 7வது வார்டு பகுதியில் V.fish முருகன் கடந்த 2011ஆம் ஆண்டு இப்பகுதி மக்களால் நகர் மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கடந்த நகர மன்ற உறுப்பினராக பதவி வகித்த போது இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வசதி ,சாக்கடை வசதி, மின்விளக்கு வசதி ,இது போன்ற அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் 100 % சதவிகிதம் நிறைவேற்றி கொடுத்துள்ளார். இவர் இப்பகுதி மக்களிடையே நன்மதிப்பைப் பெற்று உள்ளார் .

இதனை அறிந்த தலைமை அதிமுக தலைமை கழகம் எடப்பாடி, கே. பழனிசாமி, ஓ .பன்னீர்செல்வம் அவர்களது உத்தரவின்பேரில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் வருவாய்த் துறை அமைச்சருமான ,திரு .ஆர். பி. உதயகுமார் அவர்கள் பரிந்துரையின் பேரில் திருமங்கலம் நகர செயலாளர் ஜெ. டி .விஜயன் இவர்களது வழிகாட்டுதலின்படி மீண்டும் இதே 7வது வார்டு பகுதியில் போட்டியிடும் வாய்ப்பை V.fish முருகன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் திருமங்கலம் நகராட்சி 7வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவி போட்டிக்கு அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் திரு.V.fish முருகன் கட்சி வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டு தீவிர வாக்கு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் வீடுதோறும் சிறியோர் பெரியோர் பாராமல் அனைவரது காலில் விழுந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு வருகிறார்.

இவருக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செல்லும்போது கடந்த முறை தமிழக அரசு சார்பில் பெற்றுத்தந்த அனைத்து நலத்திட்டங்களும் ஏழை பயனாளிகளுக்கு வழங்கி உள்ளதாக கூறி தற்போது மக்கள் அனைவரும் V.fish முருகனை ஆரத்தி எடுத்தும் உணவு உபசரணை வழங்கி வரவேற்பு அளித்து வருகின்றனர். இவர் அனைவரது மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். திருமங்கலம் நகரில் கொரோனா ஊரடங்கு இருந்த காலங்களில் பொதுமக்களுக்கு தன் சொந்த செலவில் கணக்கில்லாத உதவிகளை V.fish முருகன் இயன்ற உதவிகளை பொதுமக்களுக்கு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

தற்பொழுது திரு.V.fish முருகன் 7வது வார்டு பகுதி மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து பிரச்சாரம் செய்யும் போது மேலும் தன்னை 7வது வார்டில் மீண்டும் வெற்றி பெற செய்தால் ஆழ்துளை மின்னியக்க பாம்பு குடிநீர் வசதி, இ சேவை மையம் ,இப் பகுதியில் அமைக்கப்படும். மேலும் மக்கள் குறைதீர்க்கும் மையம் முகாம் அமைக்கப்படும். மேலும் வீதிகளில் சாலைகள் சேதமாக் இருந்தால் சீரமைத்து மீண்டும் புதிய சாலை அமைக்கப்படும். மேலும் அடிப்படை வசதிகள் அதிகமாக மேம்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்து அதிமுக வேட்பாளர் V.fishமுருகன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த இவர் 2011இல் வார்டு உறுப்பினராக இருந்தபொழுது தனக்கென ஏதும் செய்து கொள்ளவும் இல்லை . தன் குடும்பத்திற்கு, உறவுகளுக்கு என்றும் செய்ததும் இல்லை. அரசு தரப்பில் வந்த அனைத்து நலத்திட்டங்களும் இப்பகுதியில் வாழும் ஏழை பயனாளிகளுக்கு வழங்கி உள்ளார். இதனை கருத்தில் கொண்டு திருமங்கலம் நகர் 7வது வார்டு பகுதி மக்கள் மீண்டும் V.fish முருகனை ஆதரிப்போம். அவருக்கே எங்களது வாக்கை வாக்களிப்போம் என V.fish முருகன் அவர்களிடம் 7வது வார்டு பகுதி பொதுமக்கள் வாக்குறுதி கொடுத்து வருகின்றனர்.

Updated On: 12 Feb 2022 1:48 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...