/* */

மதுரை மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள்: போலீஸார் விசாரணை

பல்வேறு குற்றச் சம்பவங்களில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

HIGHLIGHTS

மதுரை மாவட்டத்தில் பல்வேறு   குற்ற சம்பவங்கள்:  போலீஸார் விசாரணை
X

பைல் படம்

கூடல் புதூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மற்றும் ஜேசிபி எந்திரங்களில் பேட்டரி திருட்டு:

கூடல்புதூரில் நிறுத்தி வைத்திருந்த லாரி, ஜேசிபி எந்திரங்களின் பேட்டரிகளை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர் .தூத்துக்குடி கிழக்கு காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் இசக்கிமுத்து( 25.). இவரது லாரியை காமராஜர் அக்கிரஹாரத்தில் நிறுத்தி இருந்தார். இதில் இருந்த இரண்டு பேட்டரிகளை மர்ம ஆசாமி திருடி சென்று விட்டார். இந்த திருட்டு குறித்து இசக்கிமுத்து கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பேட்டரி திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர் .

ஜேசிபி இயந்திரத்தில் திருட்டு: உத்தங்குடி உலகநேரியை சேர்ந்தவர் புலிகேசி(51.) இவர் கூடல் புதூர் வள்ளலார் தெருவில் 3 ஜேசிபி எந்திரங்களை நிறுத்தி இருந்தார். அவற்றிலிருந்து மூன்று பேட்டரிகளையும் மர்ம ஆசாமி திருடி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து அவர் கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். ஒரே பகுதியில் அடுத்தடுத்து லாரி, ஜேசிபி இயந்திரங்களில் பேட்டரி திருடப்பட்ட சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் எக்கோ பார்க் அருகே பட்டாக்கத்தியுடன் வாலிபர் கைது: மதுரை, திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டியன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் திருப்பரங்குன்றம் எக்கோபார்க் அருகே சென்றபோது சந்தேகப்படும்படியாக பதுங்கி இருந்த இரண்டு வாலிபர்களை பிடிக்க முன்றார்.ஒருவர் பிடிபட்டார். அவரிடம் சோதனை செய்தபோது அவர் பட்டாக்கத்தி ஒன்றை மறைத்து வைத்திருந்தார். அவற்றை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தினார் .விசாரணையில் திருப்பரங்குன்றம் அடுத்த கீழத்தெருவைச் சேர்ந்த அழகர் மகன் பூமிநாதன்(28 ) என்றும் தப்பி ஓடியவ ர்அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி மணிகண்டன் என்ற பல்லாக்கு மணிகண்டன் என்றும் தெரிய வந்தது. பிடிபட்ட பூமிநாதனை கைது செய்தார்.அவர்கள் குற்றச்சம்பவத்தில் ஈடுபடுவதற்காக பதுங்கி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.தப்பிஓடிய ரவுடி மணிகண்டனை தேடிவருகின்றனர்.

மேல பொன்னகரத்தில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் மரணம்: மதுரை, மேல பொன்னகரத்தில் வேலை செய்த போது மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலியானார். பெருங்குடி சவுராஷ்டிரா காலனியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா( 45.). இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். மேலப்பொன்னகரத்தில் பாரதியார் ரோட்டில் கட்டிடம் ஒன்றில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு போராடிய நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கார்த்திக் ராஜாவின் மனைவி ஆர்த்தி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பெயிண்டர் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புட்டுத்தோப்பு மெயின் ரோட்டில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது: மதுரை கரிமேடு அழகரடி மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கணேசன்( 47.) இவர் புட்டுத்தோப்பு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டிய மூன்று பேர் ரூ 600ஐ வழிப்பறி செய்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து கணேசன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட மேல பொன்னகரம் பத்தாவது தெருவை சேர்ந்த கண்ணன் மகன் விமல் நாத்( 23,), மேலப்பொன்னகரம் எட்டாவது தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சூர்யா( 24 )மற்றும்( 17 )வயது சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

பெருங்குடியில் வீட்டை உடைத்து 45 பவுன் தங்க நகை பணம் கொள்ளை: மதுரை அருகே, பெருங்குடியில் வீட்டை உடைத்து 45 பவுன் தங்க நகை வெள்ளி கொலுசு பணம் கொள்ளை அடித்து சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை அருகே வலையபட்டி ஓ.ஆலங்குளத்தை சேர்ந்தவர் பாண்டி 42. இவர், சம்பவத்தன்று மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டுவேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து மாலை இருவரும் வீட்டிற்கு திரும்பினார்கள். அப்போது, அவர்கள் வீட்டை அடைந்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த நாற்பத்து நான்கரை பவுன் தங்க நகைகள், சில்வர் கொலுசு ஒரு ஜோடி, பணம் ரூபாய் 10 ஆயிரத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்று விட்டனர்.இந்த சம்பவம் குறித்து பாண்டி ,பெருங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.

Updated On: 16 Nov 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  3. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  4. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  5. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  6. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  7. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  8. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  9. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி அருகே டிப்பர் லாரி டயர் வெடித்து தீ விபத்து