/* */

மதுரையில் நாடாளுமன்ற பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி நிலை குழு ஆய்வு

திருப்பரங்குன்றம்- விளாச்சேரி கிராமத்தில் களிமண் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் கலந்துரை யாடினர்

HIGHLIGHTS

மதுரையில் நாடாளுமன்ற பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி நிலை குழு ஆய்வு
X

நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள்  மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர்

நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பல்வேறுவளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

மதுரை மாவட்டத்தில் நேற்று (29.08.2023) நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவரும்ஃதூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையில், நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையில், நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.பி.சின்ராஜ், ராஜ்வீர் தில்லர், நரேந்திர குமார், தலாரி ரங்கையா , கீதாபென் வஜெசிங்பாய் ரத்வா, சியாம் சிங் யாதவ் , எம்.முகமது அப்துல்லா , இராண்ணா கடாடி, நரன்பாய் ஜெ.ரத்வா, அஜய் பிரதாப் சிங் ஆகிய நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பெருமக்கள் இன்றைய தினம் மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்கள்.

முதலாவதாக, திருப்பரங்குன்றம் வட்டம், விளாச்சேரி கிராமத்தில் களிமண் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்கள். களிமண் பொம்மை தயாரிக்கும் முறை, அவற்றை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார்கள்.

தொடர்ந்து, மதுரை யா.ஒத்தக்கடையில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் உள்ள விவசாய தொழில் முனைவோர் பாதுகாப்பு மையத்தை நேரடியாக பார்வையிட்டார்கள். அதன்பின்பு, தமிழர்களின் வரலாற்றிற்கு ஆவணமாக திகழும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தை நேரில் பார்வையிட்டார்கள்.

பின்னர், நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் தொடங்கி, இன்றைய தினம் தமிழ்நாட்டில் நமது மதுரை மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விளாச்சேரி கிராமத்தில் களிமண் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் கலந்துரையாடி, களிமண் பொம்மை தயாரிக்கும் முறை, அவற்றை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தோம்.

அதேபோல, யா.ஒத்தக்கடையில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் உள்ள விவசாய தொழில் முனைவோர் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டோம். இந்த ஆய்வின் போது களிமண் பொம்மை தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள். இக்கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதனை நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, நாடாளுமன்ற அலுலக இயக்குநர் சி.கல்யாண சுந்தரம் , நாடாளுமன்ற நிலைக்குழு அலுவலர் சுனில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Aug 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...