/* */

மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து

மதுரை வளையங்குளம் பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
X

மதுரை வளையங்குளம் பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு மதுரை வளையங்குளம் பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

400 ஆண்டுகளுக்கு மேலாக சித்திரை திருவிழாவினை முன்னிட்டு, வலையங்குளம் கிராமத்தில் இந்த சமபந்தி அன்னதான நிகழ்வு நடைபெற்றது.

25 கிராமத்தை சேர்ந்த 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் மெகா சமபந்தி விருந்து ஆகும். இரண்டரை டன் அரிசி, 5 டன் காய்கறிகள், 300 க்கும் மேற்பட்ட சமயற்கலைஞர்கள் தயார் செய்தனர்.

வலையன்குளம் கிராமத்தில் உள்ள தானாக முளைத்த தனி விங்க பெருமாள் கோயிலில் பெண்கள் வாசலிலேயே நின்று தரிசனம் செய்வது, பொது மந்தையில் செருப்பு அணியாமல் இன்றும் பாரம்பரியத்தை கடைபிடிக்கின்றனர்.

மதுரையில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரக்கூடிய நிலையில், மதுரை ஆளும் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் வைபோகம் நடைபெற்றது. அதை அடுத்து அதிகாலை திருத்தேரோட்டம் நடைபெற்று வந்தது.

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, அதிகாலை நடைபெற்றது.

இந்நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த வளையங்களும் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தானாக முளைத்த தனிலிங்க பெருமாள் சுவாமி கோயிலில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை ஒட்டி கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு விடிய விடிய மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதை அடுத்து பொதுமக்கள் திரி எடுத்து நள்ளிரவில் வைகை ஆற்றுக்கு சென்று அதிகாலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் பங்கேற்பது வழக்கம்.

கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு மேலாக வலையங்குளம் கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக சித்திரை பௌர்ணமி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வினை முன்னிட்டு, வலையங்குளம் கிராமத்தில் இந்த மெகா விருந்து நிகழ்வு நடைபெற்றது.

50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் மெகா விருந்து நிகழ்விற்கு சமயலுக்கு அரிசி 2 ஆயிரத்து250 கிலோ, துவரம் பருப்பு ஆயிரம் கிலோ, மற்றும் கத்திரிக்காய், வாழைக்காய், முருங்கை காய், பீன்ஸ், கேரட், , அவரை காய், வாழைக்காய் என 5 டன் அளவில் சேகரிக்கப்பட்டு சமையல் செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு பூஜையுடன் மெகா விருந்து தொடங்கியது.

இந்த சமபந்தி அன்னதானம் முடிந்து உடன் இரண்டு நாட்கள் கழித்து மழை பெய்யும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை என்று கூறப்படுகிறது..

Updated On: 23 April 2024 9:56 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்