/* */

சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் குடியரசு தினவிழா

குடியரசு தினத்தை முன்னிட்டு சிறுவர் சிறுமியருக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெற்றன.

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் குடியரசு தினவிழா
X

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் நடந்த குடியரசு தினவிழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகேயுள்ள திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 73வது இந்திய குடியரசு தின விழா இன்று (26-1-2022) கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. கல்லூரியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த தேசியக் கொடியை ஏற்றினார்.

.கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் குடியரசு தின சிறப்புரை ஆற்றினார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் பார்த்தசாரதி வாழ்த்துரை வழங்கினார். குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தில் உள்ள நரேந்திராநகர் குடியிருப்பு சிறுவர் சிறுமியருக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியருக்கு, கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் பரிசுகளை வழங்கினார். விவேகானந்த கல்லூரியில் தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் ராஜேந்திரன் வரவேற்றார். விவேகானந்த கல்லூரி விளையாட்டுத் துறை இயக்குனர் சீனி முருகன் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை, வேதியியல் துறை தலைவர் சேர்வாரமுத்து தொகுத்து வழங்கினார். விவேகானந்த கல்லூரி ஆசிரியர்கள் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் நரேந்திராநகர் குடியிருப்பு வளாகம் குடியிருப்புவாசிகள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

Updated On: 26 Jan 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!