/* */

சோழவந்தான் பகுதியில் அடிக்கடி மின்தடை: மக்கள் அவதி

Frequent power outages in Cholavandan area People suffer

HIGHLIGHTS

சோழவந்தான் பகுதியில் அடிக்கடி மின்தடை: மக்கள் அவதி
X

சோழவந்தானில் திடீரென ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பாதிக்கும் நிலை தொடர்கிறது

சோழவந்தானில் திடீரென ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பாதிக்கும் நிலை தொடர்கிறது.

மதுரை மாவட்டம், சோழவந்தானில் மொத்தம் 18 வார்டுகள் மற்றும் விரிவாக்க பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 20000- க்கும்மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கிறார்கள்.இங்கு உள்ள பெரிய கடை வீதி மாரியம்மன் கோவில் சந்நிதி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் ஜவுளிக்கடைகள் மற்றும் சிறுதொழில் சார்ந்த நிறுவனங்கள் உள்ளன. கடந்த சில தினங்களாக எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி, இந்தப் பகுதிகளில் திடீர் திடீரென மின்தடை ஏற்படுவதால், பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொது மக்களுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மின்சாரதுறையினர் மின்சாரத்தை நிறுத்துவதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவர்களும் பாதிக்கப்படுவதாகவும் சமூக அலுவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மின்சாரத்தை நிறுத்தும் மின்சாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு முன்னறிவிப்பு செய்து விட்டு, பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என்றும், இதனால் பொதுமக்கள் மற்ற பணிகளில் தங்கள் கவனத்தை செலுத்துவார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.மேலும், அவர்கள் கூறுகையில், மின்சாரத் துறையில் சில அதிகாரிகள் செய்யும் இது போன்ற கெட்ட பெயர் அரசுக்கு ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Updated On: 1 July 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...