/* */

சோழவந்தான் அருகே குளியல் தொட்டி கட்டத்தாமதம்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில்குளியல் தொட்டி கட்டும் பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே குளியல் தொட்டி கட்டத்தாமதம்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
X

சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தில் தொட்டி கட்டுவதற்காக காத்திருக்கும் இடம்

சோழவந்தான் அருகே.முள்ளிப்பள்ளத்தில் உட்கட்சி பிரச்னையால் குளியல் தொட்டி கட்டும் பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் கிராமத்தில் இறந்தவர்களுக்கானஇறுதிச்சடங்கு நீர் மாலை எடுப்பதற்காக கிராம மக்கள் மயானத்துக்கு செல்லும் பாதையில் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குழாயில் குளித்து நீர் மாலை எடுத்து வந்தனர்.

இதனால், பொதுமக்களுக்கு அசௌகரியமான சூழ்நிலை இருந்து வந்தது.இதனால், கிராம பொதுமக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் குளியல் தொட்டி கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதன்பேரில், கிராமப் பொதுமக்கள் வசதிக்காக வைகை ஆற்றுக்குச் செல்லும் பாதையில் குளியல் தொட்டி அமைப்பதற்கு ஒன்றிய கவுன்சிலர் நிதியில் சுமார் 2 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குளியல் தொட்டி கட்டாமல் தடைபட்டு வருகிறது.

ஒரு சிலரின் சுயநலத்திற்காக ஏற்கெனவே, குளியல் தொட்டி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப் பட்ட இடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குளியல் தொட்டி கட்டாமல் காலம் கடந்து வருகிறது. இதனால், கிராம பொதுமக்களுடைய தேவைக்கு குளியல் தொட்டி கட்டாமல் காலம் தாழ்த்தி வருவது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது.

உட்கட்சி பூசலால் ஒரு சிலரின் எதிர்ப்பால் பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய திட்டம் பயன்படாமல் போய்விடுமோ என்று கிராம மக்கள் மிக வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ அரசு திட்டம் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டால், அதிகாரிகள் பாரபட்சம் இல்லாமல் அந்த இடத்தில் குளியல் தொட்டி கட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 13 Sep 2023 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...