/* */

மதுரை கிழக்கு தொகுதியின் அவலநிலை: குமுறும் பொதுமக்கள்

தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க வந்ததோடு சரி யாரையும் காணவில்லை என மக்கள் கொந்தளிக்கின்றனர்

HIGHLIGHTS

மதுரை கிழக்கு தொகுதியின் அவலநிலை: குமுறும் பொதுமக்கள்
X

 மதுரை மாநகராட்சி 4ஆவது வார்டுக்கு உட்பட்ட பெரியார்நகர் 2வது தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளதால்  மக்கள் அதிருப்தி

பத்திரப்பதிவுத்துறை அமைச்சரின் தொகுதியில் தொடரும் அவலம். தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க வந்ததோடு சரி யாரயும் காணவில்லை என கொந்தளிக்கும் மக்கள்.கழிவுகளை அள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் வீசும் சூழ் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த யானைமலை பிரமிப்பாய் காட்சி அளிக்கும் மதுரை கிழக்கு தொகுதி. இந்த யானை மலையில் தமிழ் பிராமிக் கல்வெட்டு, குடவரைக்கோவில் மற்றும் சமணர் படுகைகள் உள்ளன.அதேபோல முனீஸ்வரர் பத்மாசனமிட்டு யோக நிலையில் இருக்கும் பாண்டிகோவில் மதுரை கிழக்கு தொகுதியின் முக்கிய அடையாளம். இதுதவிர உயர்நீதிமன்றம், நரசிங்க பெருமாள் கோவில், திருமோகூர் பெருமாள் ஆலயம், இலந்தைகுளம் ஐ.டி. பார்க் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது.

மதுரை கிழக்கு தொகுதியில் ஆளையூர் (பேரூராட்சி), கண்ணனேந்தல் (டவுன்), நாகனாகுளம் (டவுன்), ஒத்தக்கடை (டவுன்) மற்றும் வண்டியூர் (டவுன்) ஆகியவை பெருநகரங்கள் ஆகும். அடுத்தபடியாக நாராயணபுரம், அய்யர் பங்களா, கடச்சனேந்தல், காதக்கிணறு, சத்திரப்பட்டி, பூலாம்பட்டி, கள்ளந்திரி, மாங்குளம், அப்பன்திருப்பதி, மாத்தூர், காவனூர், குலமங்கலம், கருவனூர், மந்திகுளம் உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

மதுரை கிழக்கு தொகுதியில் எவர்சில்வர் பட்டறைகள், நெசவு, விவசாயம் மற்றும் பிற தொழில்கள் உள்ளன. இவைதான் அங்கு வசிக்கும் மக்களுக்கு பொருளாதார சக்தியாக விளங்குகிறது. ஒத்தக்கடையில் 200-க்கும் மேற்பட்ட எவர்சில்வர் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றை நம்பி 50 ஆயிரம் பேர் உள்ளனர். இலந்தைகுளத்தில் 28.91 ஏக்கரில் எல்காட் சார்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா, மதுரை கிழக்கு தொகுதியில் படித்த எண்ணற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவை நனவாக்க காத்திருக்கிறது. வண்டியூரில் 2000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளது. ஆனால் இப்போது அங்கு 800 தறிகளே உள்ளன. இவைதான் அங்கு வசிக்கும் 25 ஆயிரம் பேருக்கு முழுநேர தொழிலாக உள்ளது.

மதுரை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியின் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாநகராட்சி 4ஆவது வார்டுக்கு உட்பட்ட பெரியார்நகர் 2வது தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் பல முறை அமைச்சரிடம், அந்த வார்டு திமுக மாமன்ற உறுப்பினரிடம் புகார் அளித்தும் கூட கண்டுகொள்ளாத நிலையில் வீடுகளுக்குள்ளே பூச்சிகளில் சென்று தூங்கவிடாமல் அவதியுறுவதாகவும், குழந்தைகள், முதியவர்களுக்கு தொடர்ந்து தொற்று நோய்கள் பரவி அவதியுற்று வருகின்றனர்.

நாள் தோறும் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணாக்கர்களும் கூட செல்ல முடியாத அவலம் நீடித்து வருகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கோசாகுளம் பகுதியில் அமைச்சர் மற்றும் மாநகராட்சியை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கலையச்செய்த போது காவல்துறையினரை பாதிக்கப்பட்ட பகுதிக்குள் வந்தால் மட்டுமே கலைவதாக கூறியதைத் தொடர்ந்து அதிகாரிகளை அப்பகுதிக்கு அழைத்து சென்றனர்.

பத்திரப்பதிவுத்துறை அமைச்சரின் சொந்த தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலை தொடர்கிறது. போராட்டத்தால் எவ்வித பலனும் இல்லாததால் விரக்தி அடைந்த அப்பகுதி மக்கள் சாக்கடையை அள்ளிச்சென்று மாநாகராட்சி அலுவலகத்தின் முன்பாக கொட்டுவதைத்தவிர வேறு வழியில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் அந்த பகுதியில் கடந்த 2008 -ஆம் ஆண்டு மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட மாநகராட்சி கழிப்பறை திறக்கப்படாத நிலையில், அப்பகுதி மக்கள் இயற்கை உபாதைகளுக்கு கூட காட்டுப்பகுதிக்கு செல்லும் நிலை உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது : இந்தப்பகுதிக்கு தேர்தலின்போது எம்எல்.ஏ மற்றும் கவுன்சிலர் வாக்குக் கேட்டு வந்ததோடு சரி ஆளையே காணவில்லை. நாள்தோறும் கழிவுநீரால் கடும் இன்னலுக்கு ஆளாகி வருவது தொடர்கிறது என வேதனை தெரிவித்தனர்.

Updated On: 3 Nov 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது