/* */

கொட்டாம்பட்டியில் புதிய பேருந்து நிலையம் கட்ட பூமி பூஜை

கொட்டாம்பட்டியில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை அமைச்சர் மூர்த்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

கொட்டாம்பட்டியில் புதிய பேருந்து நிலையம் கட்ட பூமி பூஜை
X

புதிய பேருந்து நிலைய பூமிபூஜையில் கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி 

கொட்டாம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டம் ஆகியவற்றின் கீழ் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் பேருந்துகள் அனைத்தும் கொட்டாம்பட்டியில் நின்று செல்லும் முக்கியமான மைய இடமாக விளங்குகிறது. கொட்டாம்பட்டியில், பேருந்துகள் வசதியாக நின்று செல்ல ஏதுவாக பேருந்து நிலையம் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் தற்போது ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டம் ஆகியவற்றின் கீழ் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

புதிதாக அமையும் இந்த பேருந்து நிலைய வளாகத்தில் விசாலமான பேருந்து நிறுத்துமிடம், உணவகங்கள், கடைகள், அலுவலக அறை, பணியாளர் ஓய்வறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, கழிப்பறைகள் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளன. கொட்டாம்பட்டி வழியாக சென்னை செல்லும் நான்கு வழிச்சாலை தமிழ்நாட்டின் முக்கிய சாலையாக விளங்குகிறது. இந்த பேருந்து நிலையம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்போது கொட்டாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்கள் மேலும் வளர்ச்சி அடையும்.

மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள விவசாயப் பெருமக்கள் பெரியாறு நீர்த்தேக்கத்திலிருந்து சாகுபடிக்காக 90 நாட்கள் நீர் திறந்து விட வேண்டும் என, கோரிக்கை வைத்தார்கள். அணையில் போதிய தண்ணீர் இல்லாத போது பாசனத்திற்காக தண்ணீர் திறந்தால் முழுமையாக தண்ணீர் பெற முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று அரசு கருதிய நேரத்தில், சில மாற்றுக் கட்சிகள் அரசியல் செய்தனர். அணையில் போதிய தண்ணீர் எட்டியவுடன், விவசாயப் பணிகளுக்கு 90 நாட்கள் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிய விவசாயிகள் மனம் குளிரும் வகையில் 115 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் மன மகிழ்ந்துள்ளனர்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் புதுமைப் பெண் திட்டம், பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்று அவர்தாம் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றிடும் நோக்கில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் இந்துமதி, கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வளர்மதி , ஊராட்சி மன்றத் தலைவர் பாலசுப்பிரமணியன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Feb 2024 5:32 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்