/* */

குத்தகைதாரரிடமிருந்து விவசாய நிலத்தை மீட்டுத் தரக் கோரி பெண் தீக்குளிக்க முயற்சி

மதுரையில் குத்தகைதாரரிடமிருந்து விவசாய நிலத்தை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

HIGHLIGHTS

குத்தகைதாரரிடமிருந்து விவசாய நிலத்தை மீட்டுத் தரக் கோரி பெண் தீக்குளிக்க முயற்சி
X

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள குலசேகரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வனஜோதி. இவரின் குடும்பத்திற்குச் சொந்தமான 17 செண்ட் விவசாய நிலத்தை, வாடிப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கடந்த 27 வருடங்களாக குத்தகைக்கு பெற்று விவசாயம் பார்த்து வந்துள்ளார். இதற்காக ஆண்டுதோறும் 10 ஆயிரம் ரூபாய் குத்தகை தொகை வழங்கி வந்த நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக குத்தகை பணம் 10 ஆயிரம் வழங்காமல் இருந்துள்ளார்.

இதையடுத்து, வனஜோதி, சந்திரசேகரிடம் குத்தகை பணம் கேட்டபோது, அந்த நிலத்திற்கு தான் பட்டா பெற்று விட்டதாகவும், குத்தகை பணம் வழங்க முடியாது எனக்கூறி மிரட்டியதாகவும், கூறப்படுகிறது.

இந்நிலையில், வனஜோதி தனது நிலத்திற்கான பட்டாவை தரக் கோரியும், சந்திரசேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதையடுத்து, அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தி தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 26 July 2021 5:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...