/* */

மதுரையில் ஜவுளிக்கடை மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மனு

தனது குழந்தையின் இந்த நிலைமைக்கு காரணமான ஜவுளிக்கடை நிர்வாகம் மூலம் உரிய நிவாரணம் பெற்று கொடுக்க வேண்டும்

HIGHLIGHTS

மதுரையில் ஜவுளிக்கடை மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மனு
X

ஜவுளிக்கடை மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தையின் சிகிச்சைக்கு  உதவிடக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெற்றோர்

மதுரையில் ஜவுளிக்கடையில் ஐந்தாம் மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க உதவி செய்ய வேண்டுமென அந்தக்குழந்தையின் தாய் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மகபூப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவருடைய ஏழு வயது மகன் நித்தீஷ் தீனா. இவர் கடந்த 2ஆம் தேதி மதுரை பைக்கரா பகுதியில் இருக்கக்கூடிய ஜவுளி கடைக்கு சென்றபோது, ஐந்தாவது தளத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர், இந்நிலையில், குழந்தை சிகிச்சையை முழுமையாக நிறைவடையும் முன்பாகவே, தனியார் மருத்துவமனை நிர்வாகம் குழந்தை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்துவிட்டனர். குழந்தைக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதற்கு போதுமான வருமானம் இல்லை. தனது குழந்தையின் இந்த நிலைமைக்கு காரணமான ஜவுளிக்கடை நிர்வாகம் மூலம் உரிய நிவாரணம் பெற்று கொடுக்க வேண்டும் மேலும் ,குழந்தைக்கு தரமான சிகிச்சை அளிக்க அரசு உதவிட வேண்டும் எனக்கூறி குழந்தையின் குடும்பத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர்.

Updated On: 26 Nov 2021 12:15 AM GMT

Related News