/* */

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை

மதுரை நகரில் பெய்த மழையால் பல இடங்களில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது

HIGHLIGHTS

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை
X

மதுரை கோமதி புரம், தாழை வீதியில், தேங்கியுள்ள மழைநீர்.

மதுரை மாவட்டம் மட்டுமில்லாமல், திண்டுக்கல் மாவட்டத்தில், நிலக்கோட்டை, முருகதூரன்பட்டி, பள்ளபட்டி, அம்மையநாயக்கனூர், மதுரை அருகே, சோழவந்தான், வாடிப்பட்டி, சமயநல்லூர், பரவை, அழகர்கோயில், மேலூர், ஓத்தக்கடை, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.மதுரை நகரில் பெய்த மழையால், பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து, கழிவுநீருடன் கலந்து சாலையில் பெருக்கெடுத்தது. மதுரை கோமதிபுரம் காதர்மொய்தீன், வீரவாஞ்சி, ஜூப்லி டவுன் பகுதிகளில் கழிவு நீரும், மழைநீருடன் கலப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வடகிழக்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக 115 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அதிக மழை பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே மாத இறுதியில் தொடங்கியது. பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அணைகள் நிரம்பி வழிகின்றன. நீர் நிலைகள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை விடைபெற்று, வடகிழக்கு பருவமழை ஓரிரு நாளில் (நவம்பர்) தொடங்கவுள்ளது.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கால நிலை ஆராய்ச்சி மையம் சார்பில், பருவமழை குறித்த முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டு அரியலுார், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலுார், சேலம், தஞ்சாவூர், நீலகிரி, திருச்சி, திருவாரூர், தென்காசி, துாத்துக்குடி, திருப்பத்துார் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், சராசரி மழையளவு கிடைக்கும்.

சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கடலுார், காஞ்சிபுரம், தேனி, மதுரை, திருவள்ளூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிபேட்டை, விழுப்புரம், திருநெல்வேலி, வேலுார் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில், சராசரியை விட அதிக மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிவகாசி பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை: விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதிகளில், வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் இடையூறுகளை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கைகளில் சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஈடுபட்டனர். இன்று காலை, நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் குழுவினர் நமஸ்கரித்தான்பட்டி, மானகசேரி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில், வெள்ளம் ஏற்படும் காலங்களில் பொதுமக்களை பத்திரமாக மீட்பது குறித்து ஒத்திகையில் ஈடுபட்டனர்.

மேலும், மழை காலங்களில் நீர் நிலைகளில் ஆபத்தான வகைகளில் விளையாட வேண்டாம் என்று அந்தப்பகுதி மக்களிடம் வலியுறுத்தி கூறினர். நீர் நிலைகளில் யாரேனும் சிக்கிக் கொண்டால், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஆபத்தில் சிக்கியிருப்பவர்களை பத்திரமாக மீட்பார்கள் என்று கூறினர். தொடர்ந்து சிவகாசியின் பல்வேறு பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது

Updated On: 30 Oct 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்