/* */

ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகளிடையே மோதல்: 4 பேர் பணியிடை நீக்கம்

மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இரண்டு தொழிற்சங்க நிர்வாகிகள் தாக்கிக் கொண்ட விவகாரத்தில் 4 பேர் சஸ்பெண்ட்.

HIGHLIGHTS

ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகளிடையே மோதல்: 4 பேர் பணியிடை நீக்கம்
X
ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் ரயில்வே ஊழியர்கள்.

மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவாயில் பகுதியில் செயல்பட்டு வரும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் தெற்கு ரயில்வே எம்பிளாயிஸ் சங்கத்தை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிக்கு, பணி இடமாற்றம் தொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரியை சந்தித்தார்.

இதற்கு மற்றொரு ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் ரயில்வே ஊழியர்கள் இரு தரப்பினர் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் அளவிற்கு மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, ரயில்வே நிர்வாகம் சார்பில் இருதரப்பு இடையே விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், தகராறில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் நான்கு பேரை சஸ்பெண்ட் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Updated On: 24 May 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  3. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  4. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  5. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  7. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  8. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  9. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  10. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!