மினரல் வாட்டர் நிறுவனம் மீது, கலெக்டரிடம் புகார்
மதுரையில், மினரல் வாட்டர் நிறுவனம் மீது பொதுமக்கள் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
HIGHLIGHTS

மினரல் வாட்டர் நிறுவனம் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்த கிராம மக்கள்.
மதுரை அருகே, பனையூர் கிராமத்தில், கன்மாய் அருகே தனியாருக்கு சொந்தமான மினரல் வாட்டர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தினசரி அதிகப்படியான நீரை உறிஞ்சுவதால், இப்பொழுது அதில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், மேலும்,சுத்திகரிப்பு தண்ணீரை அருகில் உள்ள பொதுப்பணித்துறை கால்வாயில் கலக்க விடுவதால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதாக இப்பதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக, மதுரை சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் புகார் செய்தும், மினரல் வாட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த தவறியதாக கூறப்படுகிறது. இதனால், இப்பகுதி மக்கள் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தை கட்டுப்படுத்தக் கோரியும், ஆலையை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், மனு அளித்தனர்.