/* */

டோல்கேட் அமைப்பதை தடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

பெரிய பனமுட்லு பகுதியில் டோல்கேட் அமைப்பதை தடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

டோல்கேட் அமைப்பதை தடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
X

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த கிராம மக்கள்.

கிருஷ்ணகிரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் பெரிய பனமுட்லு என்ற இடத்தில் டோல்கேட் அமைப்பதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கிருஷ்ணகிரி-திண்டிவனம் சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு, அதனை நான்கு வழிச்சாலையாக மாற்ற அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரங்களில் இருந்த நிலங்களை கையகப்படுத்தி மரங்களும் அகற்றப்பட்டன. இந்த சாலையில், 2 பெரிய பாலங்கள், 16 சிறிய பாலங்கள், 366 குறும் பாலங்கள் மற்றும் இரண்டு ரயில்வே மேல்பாலங்கள் முடியும் நிலையில் உள்ளது. சாலை அமைக்கும் பணி இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்துவிடும். சாலைப் பணிகள் நிறைவடையாததால், கிருஷ்ணகிரி –திருவண்ணாமலை செல்லும் பொதுமக்கள் மாற்று பாதையில் சென்று வந்தனர்.

இதனால் பெரும் சிரமத்திற்குள்ளாவதோடு இச்சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருகின்றது. தற்போது சாலை பணிகள் நிறைவு பெறும் நேரத்தில், டோல்கேட் அமைப்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி – -திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரியில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள பெரியபனமுட்லு என்ற இடத்தில், டோல்கேட் அமைக்க நிலங்களை தேர்வு செய்து, நிலம் அளவீடு செய்யும் பணி துவங்கியுள்ளது. இங்கு சுங்கச்சாவடி அமைத்தால், ஜெகதேவி, தொகரப்பள்ளி, ஐகுந்தம், போச்சம்பள்ளி, சந்துார், மத்துார், ஊத்தங்கரை, கல்லாவி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாவட்ட தலைநகரமான கிருஷ்ணகிரிக்கு வரும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இப்பகுதியில் இருந்து வரும் மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமெனில், இச்சாலையில் ஒரு சுங்கக் கட்டணமும், கலெக்டர் அலுவலகம் அருகில் ஒரு சுங்கக் கட்டணமும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். மேலும் தற்போது அமைக்க உள்ள சுங்கச்சாவடி நகராட்சி எல்லையில் இருந்து 4.3 கி.மீ., துாரம் மட்டுமே உள்ளது. மேலும் ஒரு சுங்கச் சாவடிக்கும், மற்றொரு சுங்கச்சாவடிக்கும் இடையில் 60 கி.மீ., துாரம் இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு விதிமுறைகளை மீறி இங்கு சுங்கச்சாவடி அமைக்க இடம் தேர்வு செய்துள்ளனர். எனவே பெரிய பனமுட்லு பகுதியில் டோல்கேட் அமைப்பதை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கைவிட வேண்டும். எனவே டோல்கேட் அமைப்பதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 Aug 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!