/* */

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு: 9,012 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி

Krishnagiri News Today: கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் முதல்போக விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு: 9,012 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி
X

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்துபாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் சரயு, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அ.செல்லக்குமார் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் முதல்போக விவசாய பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சியர் சரயு, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அ.செல்லக்குமார் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் இன்று (03.07.2023) திறந்து வைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்காக 9,012 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 03.07.2023 முதல் 09.11.2023 வரை 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் தற்பொழுது உள்ள நீர் அளவினை கொண்டும் நீர் வரத்தினை எதிர்நோக்கியும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து வலதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 75 கன அடி வீதமும், இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 76 கன அடி வீதமும் என மொத்தம் 151 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன் மூலம் கிருஷ்ணகிரி வட்டத்திலுள்ள, பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், செளட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வர மடம், காவேரிப்பட்டிணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பரஅள்ளி மற்றும் பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9,012 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறும்.

அணையின் தற்போதைய கிருஷ்ணகிரி அணைணின் நிலவரம் ( 03.07.2023) கொள்ளவு 1441.76 கன அடி, அணையின் நீர்வரத்து 162 கன அடியாகும். எனவே விவசாய பெருமக்கள் விவசாயத்திற்கு நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். மேலும் நீர் பங்கீட்டு பணிகளில் நீர்வள ஆதாரத்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சி.பாபு, நீர்வளத்துறை செயற்பொறியாளர் குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) ஆர்.டேவிட் டென்னிசன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர் சையத், நாகோஜனஹள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கதிரவன், வட்டாட்சியர் சம்பத், பெரியசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட விவசாய பெருமக்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 3 July 2023 11:19 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!