/* */

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம்
X

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, கிருஷ்ணகிரியில், தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தொமுச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தொமுச நிர்வாகிகள் பரமசிவம், ஜேக்கப்ராஜ், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏ.வும், தொமுச கவுரவத் தலைவருமான செங்குட்டுவன் பங்கேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது, பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது. தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Updated On: 9 July 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு