/* */

கிருஷ்ணகிரியில் கள்ளநோட்டு புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது - ரூ.48 ஆயிரம் கள்ளநோட்டு பறிமுதல்!

கிருஷ்ணகிரியில், கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற 3 பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.48 ஆயிரம் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் வெள்ளிச்சந்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி முத்தையா (45). கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் முருகன் என்பவரது மனைவி ஜோதி (40). இவர் தனது கணவர் உயிரிழந்த நிலையில், அரசு பள்ளி சத்துணவு உதவியாளராக உள்ளார். இருவரும் டூவீலரில் கிருஷ்ணகிரிக்கு சென்றனர்.

அங்கு, புதுப்பேட்டை பாரதிநகரைச் சேர்ந்த வேலு (57) என்பவரிடம், முத்தையா, ஜோதி இருவரும், கருவாடு வாங்கினர். அதறு 200 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளனர். கள்ள நோட்டு போல் தெரிந்ததால், சந்தேகமடைந்த வேலு, அவ்வழியே ரோந்து சென்ற தலைமை காவலர் முருகன் என்பவரிடம் தெரிவித்தார். இதையடுத்து முத்தையா, ஜோதி இருவரையும் பிடித்து, போலீசார் விசாரணை நடத்தினர்.

இருவரும், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே எர்ரகாடு பகுதியை சேர்ந்த பூசாரி முருகன்(47) என்பவரிடம் இந்த நோட்டை பெற்றதாக கூறினர். இதையடுத்து, பென்னாகரம் சென்ற போலீசார், முருகன் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு 2 கலர் பிரிண்டர், நகல் எடுத்து வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் நோட்டுக்கள் 20, 200 ரூபாய் நோட்டுகள் 57, நூறு ரூபாய் நோட்டுகள் 270 என மொத்தம் ரூ.48 ஆயிரத்து 400 மதிப்புள்ள கள்ள நோட்டுகள், ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற முத்தையா, ஜோதி, முருகன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

#கிருஷ்ணகிரி #தமிழநாடு #கிருஷ்ணகிரி #police #arrested #3people #counterfeit #notes #circulation #கள்ளநோட்டுகள் #புழக்கம் #கைது #blackmoney

Updated On: 10 Jun 2021 6:53 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?