/* */

"விரல் மை, நம் வலிமை" விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரியில் 750 பெண்கள் பங்கேற்ற “விரல் மை, நம்வலிமை” என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

விரல் மை, நம் வலிமை  விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில், சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021ஐ முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் சுமார் 750க்கும் அதிகமான அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்ட "விரல் மை, நம் வலிமை" என்பதை வலியுறுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இது குறித்து கலெக்டர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, சட்டமன்ற பொதுத் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்கு, அதுவே எங்கள் இலக்கு என்ற நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று 750க்கும் அதிகமான அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்ற "விரல் மை, நம் வலிமை" எனபதை வலியுறுத்தும் வகையில், வாக்களிக்கும் முத்திரையில் ஒரு சேர நின்ற வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், ஏடிஎஸ்பிக்கள் ராஜூ, அன்பு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் திட்ட அலுவலர் செந்தில்குமார், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் கற்பகவள்ளி, மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு பொறுப்ப அலுவலர் தேவராஜ், உதவி தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலர் பொன்னாலா உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 27 March 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  2. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  3. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  4. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  5. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  6. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்