/* */

கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தலைமையில் இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
X

கிருஷ்ணகிரி மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மைத்துறை சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மான்ய திட்ட கையேட்டை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு விவசாயிகளுக்கு வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தலைமையில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து, வேளாண்மைத்துறை சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், மற்றும் மான்ய திட்ட கையேட்டை விவசாயிகளுக்கு வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைகளை நேரடியாக கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய ஏதுவாக ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் 2023 ஆம் மாதம் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 188 மனுக்களில் 159 மனுக்கள் சம்மந்தப்பட்ட துறைகளிடமிருந்து பதில் பெறப்பட்டுள்ளது. இன்று (22.12.2023) நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 239 மனுக்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

விளக்கக் காட்சி வாயிலாக 2023-2024 ஆம் ஆண்டு ராபி பருவத்திற்கு திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் இணைந்து பயன் பெற இத்திட்டம் பற்றிய விவரங்கள், மா மற்றும் நாவல் மரங்களில் புதியதாக காணப்படும் செதில் பூச்சிகளின் சேத அறி குறிகளை பற்றி விவசாயிகளுக்கு இங்கு எடுத்துரைக்கப்பட்டது. வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மான்ய திட்டங்கள் பற்றியகையேடு, தென்னைவளர்ச்சி வாரியத்தின் திட்டங்கள் பற்றியகையேடு மற்றும் மண் வள இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளின் மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு மண் வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேப்போல நேரடி நெல் விதைப்பு இயந்திரத்தை கிருட்டினகிரி, வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். குரங்குகளால் அதிக அளவில் விவசாய பயிர்கள் சேதம் அடைவதால் வனத்துறையின் மூலம் அவற்றை பிடித்து காட்டிற்குள் விட நடவடிக்கை எடுக்கப்படும்.

வேளாண்மை துறை மூலம் சீரகசம்பா, மாப்ளசம்பா, கருப்பு கவுனி ஆகியரகங்களின் மினிகிட்டுகள் வழங்க கோரிக்கை வைத்துள்ளார்கள். உணவு மற்றும் ஊட்டசத்து இயக்கத்தின் கிழ் விவசாயிகள் கோரும் ரகங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். கால்நடைகளுக்கு அரசு மானியத்தில் உலர் தீவனம் மற்றும் பசுந்தீவனம் வழங்க கோரிக்கை வைத்துள்ளார்கள். இத்திட்டம் தற்போது நடைமுறையில் இல்லை. இயக்குநர், கால்நடைபராமரிப்புத்துறை, சென்னை அவர்களுக்கு பரிந்துறை செய்து இருக்கிறோம். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடை முறைப்படுத்தப்படும். ஆவின் மூலம் விவசாயிகளுக்கு கறவை மாடுகளை இலவசமாக வழங்க வழிவகை செய்ய கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆவின் கூட்டுறவு பால் சங்கத்தில் பால் ஊற்றும் விவசாயிகள் கறவை மாடு வளர்ப்பிற்கு கடன் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் எடுத்துரைத்துள்ளனர். அனைத்து பால் உற்பத்தியாளர்களும் தங்கள் பகுதியில் உள்ள பால் கொள்முதல் சங்கத்தை அணுகி விண்ணப்பம் அளிக்கலாம்.

மேலும் இக்கூட்டத்தில் விவசாயிகள் பட்டாமாறுதல், நிலஆக்கிரமப்பு, மின் இணைப்பு, நீர் நிலை பராமரிப்பு, சாலைவசதி, வருவாய்த்துறை ஆவணங்கள், வீட்டுமனைப் பட்டா வழங்குதல், குடிநீர் வசதி, விவசாயம் தொடர்பான பயிற்சி, வங்கிகடன், அரசுபுறம்போக்கு நிலங்கள், வனத்துறை, பேருந்து வசதி, பாதை ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஏரிகள் தூர் வாருதல், நெடுஞ்சாலைத்துறை, கால்நடைமருத்துவமனை, பயிர் கடன், நில அளவை வேளாண் மற்றும் சகோதரத் துறைகளின் திட்டங்கள் மற்றும் இதரகோரிக்கைகள் குறித்து விவசாயிகளால் கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை மனுக்கள் துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உரிய மனுதாரர்களுக்கு உரிய பதில் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பச்சியப்பன், இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை மரு.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன், உதவி திட்ட வன அலுவலர் ராஜமாணிக்கம், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Dec 2023 4:32 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  3. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  4. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  5. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  9. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  10. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?