/* */

உதயநிதி பிறந்தநாள் விழா: அன்னதானம், கிரிக்கெட் போட்டி

திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயதிதி பிறந்த நாளையொட்டி கரூரில் திமுக சார்பில் பல்வேறு கொண்டாட்டம்.

HIGHLIGHTS

உதயநிதி பிறந்தநாள் விழா:  அன்னதானம், கிரிக்கெட் போட்டி
X

கிரிக்கெட் போட்டியை எம்எல்ஏ சிவகாம சுந்தரி தொடங்கி வைக்கிறார்.

திமுக இளைஞர் அணிச் செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் ஆதரவற்ற மாணவ, மாணவியர்களுக்கு அறுசுவை உணவு வழங்கல், நலத்திட்ட உதவிகள் மற்றும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

கரூர் வெண்ணைமலையில் உள்ள அன்புக்கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் மாவட்ட திமுக சார்பில் இன்று சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மதியம் தாந்தோணி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் வெள்ளியணை கிராமத்தில் ராகவேந்திரா அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் ஆதரவற்ற மாணவ மாணவிகளுக்கு மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

தொடர்ந்து வெள்ளியணை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில் கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி கலந்துகொண்டு பேசுகையில், கரூர் மாவட்டத்தில் நிமிர்ந்து நில் துணிந்து சொல் என்ற திட்டத்தின்படி பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் மாணவிகள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மூலம் உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டால், சட்டம் தன் கடமையை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

சமுதாயத்தில் மாணவிகள் கல்வியில் உயர்ந்து உயர் பதவிகளுக்கு வருவதற்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றார். மாவட்ட திமுக சார்பில் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி துவக்கி வைத்தார்.

இந்த விளையாட்டு போட்டியில் கரூர் மாவட்டத்தில் உள்ள 100 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். முதல் பரிசாக ரூ. ஒரு லட்சம், இரண்டாவது பரிசாக ரூ 75 ஆயிரம், 3-ஆவது பரிசாக ரூ 50 ஆயிரம், நான்காவது பரிசாக ரூ. 25000 வழங்கப்படுகிறது.

Updated On: 27 Nov 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்