/* */

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா
X

விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

கரூர் நகரின் மையப் பகுதியில், கரூர் மாரியம்மன் ஆலயத்தின் அருகே அமைந்திருக்கும் ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் தைமாத சங்கடஹர சதுர்த்தி நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முன்னதாக மூலவர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகருக்கு, பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட விசேஷ, சிறப்பு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் மூலவருக்கு பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் சந்தனம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க அங்கி அணிந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் மூலவர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகருக்கு கோபுர ஆரத்தி மற்றும் கற்பூர ஆரத்தி ஆகியவைகள் எடுக்கப்பட்டு, பின்னர் நடைபெற்ற மகா தீபாராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொரோனா கால கட்டுப்பாடுகளை உணர்ந்து பக்தர்கள் குறைந்த அளவு மட்டுமே கலந்து கொண்டனர்.

உலக நன்மைக்காக நடைபெற்ற இந்த சங்கடஹர சதுர்த்தி பூஜையில், கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் ஆகியவைகள் உலகினை விட்டு விலக வேண்டியும், மக்கள் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாக வாழவும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை ஆலய ஸ்தானிக்கர் வசந்த் சர்மா செய்தார்.

Updated On: 24 Jan 2022 6:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  2. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!