/* */

'கொரோனா இல்லா கரூர்' ஒரு வாரம் விழிப்புணர்வு போட்டிகள் நடத்த திட்டம்

'கொரோனா இல்லா கரூர்' கொரோனா குறித்த விழிப்புணர்வு போட்டிகள் ஒரு வார காலத்துக்கு நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கொரோனா இல்லா கரூர் ஒரு வாரம் விழிப்புணர்வு போட்டிகள் நடத்த திட்டம்
X

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்

'கொரோனா இல்லா கரூர்' என்ற தலைப்பில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையினை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஒரு வார காலத்திற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள் கரூர் மாவட்டம் முழுவதும் நடத்தப்படவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையிலிருந்து தற்காத்துக்கொள்வது, தொற்றைக் கட்டுப்படுத்துவது, தொற்று வராமல் தடுப்பது உள்ளிட்ட தகவல்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையிலான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும் , இந்த மூன்றாவது அலையின் மூலம் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில், நிர்வாகத்தின் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் ஆகஸ்ட் 7 ம் தேதி வரை ஒரு காலத்திற்கு கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும், தமிழக அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்குதல், விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு குறும்படங்களை பொதுமக்களுக்கு திரையிடுவது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

கொரோனா விழிப்புணர்வு குறித்து ஓவியப்போட்டி, குறும்படப்போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. 'கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு' என்ற பொதுத்தலைப்பில் இப்போட்டிகள் நடத்தப்படவுள்ளது . ஓவியப்போட்டிக்கு பல்வேறு வண்ணங்களில் படங்கள் வரையலாம் ஏ 4 அளவு தாள் அளவில் படங்கள் இருக்க வேண்டும்.

கட்டுரைப்போட்டிக்கு 150 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒருபக்க அளவில் கட்டுரைகள் இருக்க வேண்டும். மீம்ஸ் மற்றும் ஸ்லோகன் போட்டியில் கலந்துகொள்வோர் இரண்டு வரிகளில் தங்களது படைப்புகளை வழங்க வேண்டும். குறும்படப்போட்டியில் பங்கெடுப்போர் இரண்டு நிமிடங்களுக்குள் தங்கள் படைப்புகளை வழங்க வேண்டும்.

இப்போட்டிகளில் பங்குபெற வயது வரம்பு கிடையாது. போட்டிகளில் பங்கெடுக்க விரும்பும்வோர் பெயர், வாட்ஸ் ஆப் அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வீட்டின் முழு முகவரி ஆகிய விவரங்களுடன் Covidawarenessiec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் . 9498747670 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும் தங்களது படைப்புகளை 03.08.2021 இரவு 12 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

நேரில் சமர்ப்பிக்க தேவையில்லை. இந்த போட்டிகளில் சிறப்பான படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். அதுமட்டுமல்லாது, சிறந்த ஓவியங்கள், கட்டுரைகள் மற்றும் குறும்படங்கள் மாவட் ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 31 July 2021 4:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்