/* */

கருவூர் திருக்குறள் பேரவையின் 36 -வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கருவூர் திருக்குறள் பேரவையின் 36 -வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

கருவூர் திருக்குறள் பேரவையின் 36 -வது ஆண்டு விழா கொண்டாட்டம்
X

திருக்குறள் பேரவை ஆண்டு விழாவில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

கருவூர் திருக்குறள் பேரவையின் 36 ம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு உள்ள நகரத்தார் சங்க மண்டபத்தில், கருவூர் திருக்குறள் பேரவையின் செயலாளர் மேலை.பழநியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் 133 போற்றி பாடல்கள் பாடப்பட்டது. அந்த திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் நிகழ்ச்சி தொடங்கியது.

கருவூர் திருக்குறள் பேரவையின் 36 ம் ஆண்டு விழா சிறப்பு மலர்களை பி.டி.கோச் தங்கராசு வெளியிட கிராமியம் நாராயணன் பெற்றுக் கொண்டார். மேலும், தமிழகத்தினை சார்ந்த 40 படைப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்களுக்கு சிறப்பும் விருதும், பரிசுகளும் கொடுத்து கெளரவிக்கப்பட்டது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் திருக்கரங்களால் கடந்த 1986 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பேரவையின் நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்களும் மற்றும் தமிழ் உணர்வாளர்களும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

இவ்விழாவில் பேசிய கருவூர் திருக்குறள் பேரவையின் செயலர் மேலை பழநியப்பன் தமிழக அரசு உடனடியாக மாநிலம் முழுதும் செயல்பாட்டில் உள்ள திருக்குறள் பேரவைகளை அங்கீகாரம் செய்து அவற்றிற்கு இடம் வழங்கி சிறிய படிப்பகம் நிறுவ வேண்டும், அப்போது தான், அதன் மூலம் வளரும் தலைமுறைக்கு வள்ளுவத்தையும் வாழ்வியல் ஆக்குதல், தமிழை பேச்சு மொழி. எழுத்து மொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழி ஆகியவைகளாக ஆக்குவதற்கு அரசு இந்த திருக்குறள் பேரவைகளுக்கு பயிற்சியளிக்கும் மையமாக அமைக்க வேண்டும், திருக்குறள் விருதாளர்களை உருவாக்கும் பணிகளை செய்ய உடனடியாக ஆணையிட வேண்டும், மேலும், மாவட்டம் தோறும் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும் தற்போது கருவூர் திருக்குறள் பேரவைக்கு வழங்கப்பட்ட சிலையானது, ஏற்கனவே அரசிற்கு கோரிக்கை விடுத்தது போல, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு உள்ள உயர்மின்கோபுர மின் கம்பத்தின் கீழ் அமைக்க வேண்டுமென்றும், அது வரை கருவூர் திருக்குறள் பேரவை பரமாரிப்பில் இந்த சிலை இருக்கும் என்றும் கருவூர் திருக்குறள் பேரவை செயலர் மேலை.பழனியப்பன் கேட்டுக் கொண்டார்.

Updated On: 24 Jan 2022 1:13 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  2. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  3. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  4. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  6. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  7. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்