/* */

குமரியில் அதிக பாரம் ஏற்றி வந்த 23 வாகனங்கள் மீது வழக்கு

குமரியில் அதிக பாரம் ஏற்றி வந்த 23 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 1 லட்சத்து 14 ஆயிரத்து 930 ரூபாய் அபராதம் வசூல்.

HIGHLIGHTS

குமரியில் அதிக பாரம் ஏற்றி வந்த 23 வாகனங்கள் மீது வழக்கு
X

குமரியில் வாகன சாேதனையில் ஈடுப்பட்ட போலீசார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அளவுக்கு அதிகமான பாரங்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் அதிவேகமாக வருவதால் விபத்துகள் அதிகரித்து வருவது வாடிக்கையாக அமைந்துள்ளது.

இது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் இன்று மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில் ஒரே நாளில் 23 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 1 லட்சத்து 14 ஆயிரத்து 930 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

ஒருநாள் சோதனையில் 23 வாகனங்கள் சிக்கி இருக்கும் நிலையில் விபத்துகளை தடுக்கும் வகையில் இது போன்ற சோதனைகளை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Updated On: 25 April 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்