/* */

இரு கால்களும் மடங்கி பிறந்த குழந்தையின் சிகிச்சைக்கு உதவி செய்ய கோரிக்கை

குமரியில் இரு கால்களும் மடங்கி பிறந்த ஏழை குழந்தையின் மருத்துவத்திற்கு அரசு உதவி செய்ய பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

இரு கால்களும் மடங்கி பிறந்த குழந்தையின் சிகிச்சைக்கு  உதவி செய்ய  கோரிக்கை
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தாழக்குடி பகுதியை சேர்ந்தவர் வினோத் ஐஸ்வர்யா தம்பதியினர்.

இவர்களுக்கு பிரபா விக்னேஷ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருக்கும் நிலையில் இந்த குழந்தை பிறவியிலேயே கால் பாதங்கள் இரண்டும் மடங்கி நடக்க முடியாமல் இருந்து வருகிறான்.

இதனிடையே பல அரசு மருத்துவமனைகள், வைத்தியசாலைகள், தனியார் மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கியும் எந்த பலனும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மூலமாக கால் பாதங்களை சரி செய்வதே ஒரே வழி என்றும் உடனடி அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை என்றால் கடைசி வரை குழந்தையால் நடக்க முடியாது என்றும் மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.

ஆனால் அதற்கு குறைந்த பட்சம் இரண்டு லட்ச ரூபாய் வரை செலவாகும் என்ற நிலையில் அன்றாடம் கூலி வேலை பார்த்து அதில் கிடைக்கும் சிறு வருவாய் மூலம் குடும்பத்தை நடத்தி வரும் தங்களால் அவ்வளவு பெரிய தொகையை எடுக்க இயலாது என கூறும் வினோத் ஐஸ்வர்யா தம்பதிகள் தனியார் மருத்துவமனை மூலமாக குழந்தையின் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தமிழக அரசு உதவி செய்தால் மற்ற குழந்தைகளைப் போல தங்களது குழந்தையும் சாதாரணமாக நடக்கும் என கூறியதோடு அரசு தங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை பிரபா விக்னேஷுடன் பெற்றோர் மனு அளித்தனர்.



Updated On: 19 March 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  3. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  4. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  8. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  9. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  10. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்