/* */

21 ஆண்டுகளுக்கு பின்னர் பொய்கை அணையில் இருந்து நீர் திறப்பு

குமரியில் கனமழையால், 21 ஆண்டுகளுக்கு பின்னர் பொய்கை அணை நிரம்பிய, அணையில் இருந்து விவசாயத்திற்காக நீர் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

21 ஆண்டுகளுக்கு பின்னர் பொய்கை அணையில் இருந்து நீர் திறப்பு
X

சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில்,  அணை நீரை திறந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாரம் மற்றும், நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டார பகுதி விவசாயிகள் வசதிக்காக கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில், 2000ம் ஆண்டு, 45 அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணை கட்டப்பட்டது. அணை கட்டப்பட்ட நாள் முதல், முழுமையாக நிரம்பாமல் குறிப்பிட்ட 15 அடிக்கும் குறைவான அளவிலேயே தண்ணீர் இருந்து வந்தது. இதனால் விவசாயத்திற்கு அணை நீரை பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வந்தது.

தற்போது, கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், தாடகை மலையில் இருந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, 21 ஆண்டுகளுக்கு பின்னர் பொய்கை அணை, முதல்முறையாக தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனை தொடர்ந்து அணையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் உறுதித்தன்மையை உறுதி செய்தனர்.

இந்நிலையில், அணையில் இருந்து தோவாளை மற்றும் ராதாபுரம் வட்டார விவசாயிகள் வசதிக்காக, இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில் விவசாயத்திற்காக அணை நீரை திறந்தனர். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்