/* */

முழு ஊரடங்கு நாளில் பூ விற்பனைக்கு விலக்கு: வியாபாரிகள் கோரிக்கை

முழு ஊரடங்கு நாளில் பூ விற்பனைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

முழு ஊரடங்கு நாளில் பூ விற்பனைக்கு விலக்கு: வியாபாரிகள் கோரிக்கை
X

தோவாளை பூ சந்தை.

தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற மலர் சந்தையான கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள டாக்டர். எம்ஜிஆர் மலர் சந்தைக்கு மதுரை திண்டுக்கல், ராயக்கோட்டை, ஓசூர், பெங்களூர் என வெளியூர்களில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் வருகின்றன.

மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம், ஆரல்வாய்மொழி தோவாளை, செண்பகராமன்புதூர் என குமரி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல டன் பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.

அதன்படி கொண்டு வரப்படும் பூக்கள் தோவாளை மலர் சந்தையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா மாநிலத்துக்கு பூக்கள் ஏற்றுமதி நடைப்பெறும்.

குறிப்பாக கேரளா மாநிலத்தின் 70% பகுதிகளுக்கு இங்கு இருந்து தான் வாகனங்கள் மூலமாக மொத்தமாக பல டன் பூக்கள் அனுப்பபடுகிறது.

இந்நிலையில் கொரோனா ஓமிக்கிரான் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டங்களில் பறிக்கப்படும் பூக்களை தோவாளை பூ சந்தைக்கு கொண்டு வந்து அதனை கேரளா மாநிலத்திற்கு வாகனங்கள் மூலமாக கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அன்றாடம் பறிக்கப்படும் பூக்கள் வாடி விடும் என்பதால் மறுநாள் விற்பனை செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த காரணத்தால் பூ விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே பூ விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அறிவித்தது போன்று பூ விவசாயத்திற்கும் பூ விற்பனைக்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிப்பதோடு, குமரி மாட்டத்தில் இருந்து பூக்களை வாகனங்கள் மூலமாக கேரளா மாநிலம் கொண்டு செல்லவும் அனுமதி அளிக்க வேண்டும் என பூ விவசாயிகளும் பூ வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 9 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  3. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  4. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  5. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  6. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  7. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  8. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  9. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  10. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...