/* */

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைப்பு

குமரியில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைப்பு
X

குமரியில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில் ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் சிறப்பு விற்பனை கண்காட்சிகள் நடத்தப்படும் வழக்கம்.

அதன்படி அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று நாகர்கோவிலில் உள்ள கோ ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சி தொடங்கியது.

தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் தொடங்கி வைத்த இந்த கண்காட்சியில் தீபாவளி பண்டிகைக்கு 30 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மென் பட்டு புடவைகள் காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், திருபுவனம் பட்டு புடவைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள் உள்ளிட்ட பல்வேறு துணிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியில் வரும் தீபாவளி பண்டிகைக்கு 6 கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

Updated On: 23 Oct 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை