/* */

ஸ்ரீபெரும்புதூர் : குறி கேட்க வருபவரை புல் பாட்டில் மது குடிக்க வைக்கும் சாமியார்

ஸ்ரீபெரும்புதூர் அருகே குறி கேட்க வரும் நபர்களை புல் சரக்கு அடிக்க வைத்து குறி சொல்லி அனுப்பும் சாமியார் செய்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் : குறி கேட்க வருபவரை புல் பாட்டில் மது குடிக்க வைக்கும் சாமியார்
X

பக்தர்களை மது குடிக்க வைக்கும் சாமியார்.

பொதுமக்கள் தங்கள் குடும்ப பிரச்சினைகளை தீர்க்க கோரி தங்கள் சமயம் சார்ந்த ஆலயங்களை தேடி சென்று நேர்த்தி கடன் செலுத்துபவர்கள் ஒரு வகையினர். இதனையும் தாண்டி கிராம பகுதிகளில் உள்ள அம்மன் ஆலயங்கள், கருப்புசாமி கோயில், தற்போது திருநங்கைகள் கோயில் பல இடங்களில் சென்று குறி எனும் ஒருவகை ஜோசியம் கேட்பர்.

இந்த குறி சொல்லும் சாமியார்கள் ஆடிப்பாடி சொல்பவர்கள், பெண் உடை அணிந்து சொல்பவர்கள் , சுருட்டு பிடித்தபடி சொல்பவர்கள் என பலவகையினர் இருப்பதை அறிந்து இருப்பீர்கள்.

ஆனால் காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் வட்டம், சுங்கச்சாவடி அருகே உள்ள நெமிலி கிராமத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மணி என்பவர் கடந்த பத்து வருடங்கள் முன்பு ஆலயம் அமைத்து செவ்வாய்கிழமை ரூ300 மற்றும் புதன்கிழமை என்றால் சிறப்பு காணிக்கையாக ரூ1000 என பெற்று கொண்டு குறி என்ற ஜோசியம் கூறிவருகிறார்.


இதில் நமக்கு கிடைத்த வீடியோ ஒன்றில் குறி கேட்க வந்த நபருக்கு ஒரு புல் பாட்டில் மதுகொடுத்து நிற்காமல் குடிக்க சொல்லி அவருக்கு குறி சொல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்று மது அருந்தினால் இவரது உடல்நிலை அபாயநிலைக்கு செல்லும் என அறியாது அவரும் அருந்தும் நிகழ்வு உயிர்பயத்தை ஏற்படுத்துகிறது.

இதை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இமை கொட்டாமல் பார்த்து கொண்டு இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது .

உடனடியாக இதுகுறித்து காவல்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 2 Sep 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  3. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  5. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  7. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  9. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  10. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது