/* */

மின்தடையை சீர்செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

ஊத்துகாடு பகுதியில் லாரி மோதிய மின்கம்பத்தில் சீர் செய்ய முயன்ற ஊழியர் மோகன்ராஜ் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

மின்தடையை சீர்செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு
X

மின்சாரம் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த மின்வாரிய ஊழியர் மோகன்ராஜ்.

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில், ஊத்துக்காடு பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் வயர்மேனாக பணியாற்றி வருகின்றார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

நேற்று நள்ளிரவவு ஊத்துகாடு அருகே உள்ள மின் கம்பத்தின் மீது, சாலை விரிவாக்க பணிக்கு சென்ற ஆர் ஆர் இன்ஃபிரா சொலுஷன் நிறுவனத்தின் கனரக லாரி ஒன்று மோதியதில் மின்கம்பம் சாய்ந்து மின் தடை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலையில் சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை சீர் செய்து கொண்டிருந்தனர். .

வயர்மேன் மோகன்ராஜ் மின் கம்பத்தின் மீது ஏறி சரிசெய்ய முயன்ற போது திடீரென மோகன்ராஜ் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் மின் கம்பத்தின் உச்சியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனடியாக மின் ஊழியர்கள் வாலாஜாபாத் காவல் துறையினருக்கும், ,தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மின் கம்பத்தில் ஏறி மோகன்ராஜின் உடலில் கயிறு கட்டி கீழே இறக்கினர்.

வாலாஜாபாத் காவல் துறையினர் மோகன்ராஜியின் உடலை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 12 Aug 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  3. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  5. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  6. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  7. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  8. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  9. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  10. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?