/* */

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22778 பேர்‌ பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குரூப் 2 தேர்வு எழுத விண்ணப்பித்த 26 ஆயிரத்து 34 நபர்களில், 22778 பேர் 88 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.

HIGHLIGHTS

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22778 பேர்‌ பங்கேற்பு
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற குரூப் 2 தேர்வு மையத்தினை ஆய்வு செய்த காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெ. ராஜலட்சுமி.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்‌ - 2 தேர்வு 38 மாவட்டங்களில் இன்று காலை நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குரூப் -2 தேர்வினை எழுதுவதற்காக 26034 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 22778 பேர் மட்டும் தேர்வு எழுத வந்திருந்தனர். 3256 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாவட்டத்தில் 88 இடங்களில் தேர்வு நடைபெற்றது.ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் முதன்மைக் கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வர்கள் கைபேசி, மின்னணு சாதனங்கள்,புத்தகங்கள்,பொதுக்குறிப்பு தாள்கள் ஆகியன எடுத்து வந்தவர்களுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு அங்கு வைத்து விட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

முன்னதாக அதிகாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூல அலுவலகத்திலிருந்து வினாத்தாள்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ.ருத்ரய்யா முன்னிலையில் சரக்கு வேன்களில் போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தேர்வு எழுதிய பலரும் தமிழ்,கணிதம் மிக எளிதாக இருந்ததாகவும், பொது அறிவு வினாக்கள், நடப்பு நிகழ்வுகளாக இருந்ததாகவும், அவை கடினமானதாக இருந்ததாகவும் தெரிவித்தனர். தேர்வர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே தேர்வை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!