/* */

பத்திரப்பதிவு அலுவலர் வீட்டில் 42 சவரன் திருட்டு - 4 பேர் கைது

சின்ன காஞ்சிபுரம் பத்திரப்பதிவுத்துறை அலுவலர் வீட்டில் திருடப்பட்ட 42 சவரன் நகை மீட்கப்பட்டது; இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

பத்திரப்பதிவு அலுவலர் வீட்டில் 42 சவரன் திருட்டு - 4 பேர் கைது
X

காஞ்சிபுரம் தாலுகா காவல் எல்லைக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம் சுதர்சன் நகரில் வசிப்பவர் ராஜி. இவர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவிதா, வாலாஜாபாத் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த மாதம் இவரது உறவினர் வீட்டு திருமணத்திற்காக சென்றுவிட்டு, மாலை 4 மணியளவில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த சுமார் 9 லட்சம் மதிப்பிலான 42 சவரன் நகை களவு போய் இருந்தது. இதுதொடர்பாக கவிதா அளித்த புகாரின் பேரில், தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து ஆய்வாளர் ராஜகோபால் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், காஞ்சிபுரம் கிளை சிறைச்சாலையில் இருந்த சிவகங்கை , சேலம் மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேர்கள் மீது சந்தேகம் எழுந்தது. அதன் பேரில், அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து அதில் இந்த 4 பேரும் வீடு புகுந்து களவு செய்தது உறுதி செய்யப்பட்டது. சேலத்தை சேர்ந்த மனோஜ், சிவகங்கையை சேர்ந்த ராஜாராம், கார்த்திக்ராஜா, நிலக்கோட்டையை சேர்ந்த திலிப்திவாகர் ஆகியோரை மதுரைக்கு அழைத்து சென்று, அவர்களிடம் இருந்து 42 சவரன் நகைகள் மீட்கப்பட்டன. மேற்படி நபர்களை காஞ்சிபுரம் ஜே.எம் 2 குற்றவியல் நீதிமன்றம் இரண்டு, நீதிபதி சரவண குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி தஞ்சாவூர் டவுன் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 30 Nov 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...