/* */

காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 542 வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 542 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.8.25 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 542 வழக்குகளுக்கு தீர்வு
X

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் நிகழ்வில் வழக்காளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதான நிலை மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு நீதிமன்ற அமைப்பு ஆகும்.

இந்த நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு கண்டு வழக்குகளை முடித்து வைக்கிறது.

நீதி மன்றத்திலிருக்கும் நிலுவையிலுள்ள வழக்குகளில் சம்மந்தப்பட்ட இருதரப்புக்கும் இடையே சமரசத் தீர்வு ஏற்படுத்துதல். நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட சில பிரச்சனைகளுக்கும் பேசித் தீர்வு காண முயலுதல் இதன் முக்கியமான நோக்கமாகும்.

வழக்குத் தரப்பாளர்களுக்குக் குறைந்த செலவில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்தல் என நோக்கத்துடன் சட்டப்பணிகள் குழு சார்பாக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை லோக் அதாலத் நடத்தப்படுகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரத்தில் இன்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 542 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.8.25 கோடி இழப்பீட்டுத் தொகையை பயனாளிகளுக்கு மாவட்ட நீதிபதி(பொறுப்பு) எம்.இளங்கோவன் வழங்கினார்.காஞ்சிபுரம் வட்டார சட்டப்பணிகள் குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் கூடியது.

மாவட்ட நீதிபதி (பொறுப்பு) இளங்கோவன் தலைமை வகித்தார்.தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம்,கூடுதல் சார்பு நீதிபதி திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வழக்கறிஞர் சங்க தலைவர் எஸ்.ஜான் வரவேற்றார். இந்நீதிமன்றத்தில் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த சிவகங்கை மாவட்டம் வேளாந்தல் கிராமத்தை சேர்ந்த பொறியாளர் வினோத்குமார்(24)மீது தனியார் பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கில் இழப்பீட்டுத் தொகையாக ரூ.19 லட்சத்துக்கான காசோலையினை வினோத்குமாரின் தந்தை சக்திவேலிடம் மாவட்ட நீதிபதி (பொறுப்பு) இளங்கோவன் வழங்கினார்.

மக்கள் நீதிமன்றத்தில் வங்கி வராக்கடன் , வழக்கு ,விபத்து வழக்கு, காசோலை வழக்கு உட்பட மொத்தம் 542 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.8.25கோடி மதிப்பிலான இழப்பீட்டுத் தொகை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

நீதிபதிகள் ராஜேஸ்வரி,சரண்யா செல்வம், வாசுதேவன்,வழக்கறிஞர் சங்க தலைவர் ரமேஷ், அரசு வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, பத்மனாபன்,ஹரிஹரன்,துரைமுருகன்,கார்த்திகேயன் உட்பட வழக்றிஞர்கள், வழக்காடிகள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் இரண்டு தரப்பு வாதிகளின் அமர வைத்து மன நிறைவுடன் அவர்களை சமரசம் செய்து வைப்பதால் கடந்த காலங்களில் இருந்த பகைகள் நீங்கி மன மகிழ்ச்சியுடன் செல்ல இது வாய்ப்பாக அமைகிறது. மேலும் இந்த நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளுக்கு நீதிமன்ற கட்டணம் கிடையாது என்பது கூடுதல் தகவலாகும்.

விபத்து வழக்குகளில் வழங்கப்படும் இழப்பீடுகள் அவர்களது குடும்பத்தினர் கணக்குகளில் மூன்று ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அதில் வரும் வட்டி நிதியை கையாண்டு 3 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பணத்தை பயன்படுத்த இயலும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறுகிய காலத்தில் சமரச வழக்குகள் முடிவு பெற்று வருவதால் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தேக்கம் என்ற மனநிலை வழக்காடிகளுக்கு ஏற்படுவதில்லை என்பதால் இதனை வழக்கறிஞர்கள் , வழக்கு சம்பந்தபட்வர்கள் என அனைத்து தரப்பினரும் வரவேற்கின்றனர்

Updated On: 12 Nov 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  2. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  3. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  4. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  6. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  8. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  9. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்