/* */

சாலையில் சிதறிய ஜல்லி கற்கள்! உடனடியாக களமிறங்கிய தூய்மை பணியாளர்கள்

காஞ்சிபுரம் மாநகர் பகுதிகளில் பல கிலோமீட்டர் தூரம் கனரக லாரியில் ஏற்றி சென்ற சிறு ஜல்லி கற்கள் சாலையில் சிதறியதால் விபத்து அபாயம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

சாலையில் சிதறிய  ஜல்லி கற்கள்!  உடனடியாக களமிறங்கிய தூய்மை பணியாளர்கள்
X

காஞ்சிபுரம் மாநகர் வள்ளல் பச்சையப்பன் தெரு பகுதியில் சாலையில் சிதறி கிடந்த ஜல்லி கற்களை விபத்து அபாயத்தை போக்கும் வகையில் துரிதமாக செயல்பட்டு ஜல்லிகளை அகற்றும் தூய்மை பணியாளர்கள்.

காஞ்சி மாநகரில் பல கிலோமீட்டர் தூரம் சிதறிய ஜல்லிக்கற்கள்..விபத்தை தவிர்க்க துரிதமாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கல்குவாரிகள் இயங்கி வருகிறது. அருகில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்தும் கல் குவாரிகளில் கட்டுமான பொருட்கள் நாள்தோறும் காஞ்சிபுரம் பகுதிகளில் இருந்து பல நூறு கணக்கான கனரக வாகனங்கள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை அவ்வகையில் சிறு ஜல்லி எடுத்துச் சென்ற லாரியில் இருந்து கற்கள் காஞ்சிபுரம் நகர் சாலை முழுவதும் பல கிலோமீட்டர் தூரம் சிதறியவாறு சென்றதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.


இதை அறிந்த மாவட்ட நிர்வாகம் தூய்மை பணியாளர் உதவியுடன் சாலை ஓரம் சிதறி கிடக்கும் சிறு கற்களை ஒருங்கிணைத்து சுத்தப்படுத்தியும் விரைவாக பணி மேற்கொண்டதால் வாகன விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது.

இது மட்டும் இல்லாமல் இன்று அரசு பொதுத்தேர்வு துவங்கி நடைபெற்று வருவதால் அதற்காக பெற்றோர்களுடன் இருசக்கர வாகனத்தில் வருவோர் அதிகாலை தொழிற்சாலை பணிக்கு செல்வோர் என பலர் உள்ள நிலையில் இது போன்று செயல்களை செய்யும் கனரக வாகனங்களுக்கு அபராதம் இப்போது மட்டுமல்லாமல் இதற்கான சுத்தம் செய்யும் பணியின் செலவையும் ஏற்க வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் இதுபோன்று கட்டுமான பொருட்களை விதிமுறைகளை மீறி கூடுதலாக ஏற்றி செல்வதாலே இது போன்ற சிதறல்களும் ஏற்படுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

Updated On: 25 March 2024 4:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  2. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  3. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  4. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  5. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  7. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!