/* */

அரசு மதுபான கடையினை இட மாற்றம் செய்யக் கோரிக்கை.

Public Request Tasmac Place Change படப்பை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்ட நிலையில் தற்போது குடியிருப்பு பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரசு மதுபான கடையினை இட   மாற்றம் செய்யக் கோரிக்கை.
X

படப்பை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் அரசு மதுபான கடையை விட மாற்றம் செய்து குடியிருப்பு பகுதியில் அமைத்ததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கிராம பொதுமக்கள்

Public Request Tasmac Place Change

குடியிருப்பு பகுதியில் அரசு மதுபானக் கடை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆரம்பாக்கம் பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

பள்ளி கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள படப்பை பகுதியை சுற்றியுள்ள பகுதியை நாட வேண்டிய நிலையில், கடந்த காலங்களில் ஆரம்பாக்கம் கிராம வெளிப்பகுதியில் செயல்பட்டு வந்த அரசு மதுபானம் கடை எண் 4096 வை கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராமத்திற்குள் இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் பெண்கள் என பலர் போராட்டம் நடத்திய நிலையில் மணிமங்கலம் காவல்துறையினர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட அறிவுறுத்தப்பட்டது.

Public Request Tasmac Place Change


படப்பை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ததை கண்டித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

இந்நிலையில் இன்று சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் என பலர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முயற்சித்த போது தேர்தல் நன்னடத்தை விதி காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது.இந்நிலையில் பொதுமக்கள் தங்களை பார்க்க ஆட்சியர் வர கோரிக்கை வைத்த நிலையில் அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்து இதுகுறித்து அலுவலர் ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஏற்கனவே ஆண்கள் நாளொன்றுக்கு மூன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் குடிக்கும் நிலையில் தற்போது கிராமத்தில் உள்ளேயே அரசு மதுபான கடை வந்தால் எங்களின் வாழ்வாதாரம் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் எனவே இந்த அரசு மதுபான கடையை உடனடியாக அகற்றாவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம பொதுமக்கள் குவிந்து தான் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Updated On: 19 March 2024 10:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  2. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  3. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  4. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  6. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  8. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  9. வீடியோ
    KKR -ஐ கிழித்து தொங்க விட்ட Bairstow ! Master Blaster Chase !...
  10. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?