/* */

தேர்தல் விதிகளை திமுகவிற்காக தளர்த்திய காவல்துறை..!

தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் 100 மீட்டர் தொலைவிற்குள் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகளை அனுமதித்த காவல்துறை.

HIGHLIGHTS

தேர்தல் விதிகளை திமுகவிற்காக தளர்த்திய காவல்துறை..!
X

பாமக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்த பின் , காவல்துறை தேர்தல் விதிமுறை செயலைக் கண்டித்து உரையாற்றிய பாமகவினர்.

தேர்தல் விதிகளை பொறுத்தவரை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவதாக பாமக கடும் குற்றம் சாட்டு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

வேட்பு மனு தாக்கல் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நன்னடத்தை காரணமாக மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏ டி எஸ் பி தலைமையில் 150 க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் உள்ளனர்.

மேலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் காவல் கட்டுப்பாட்டும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் உடன் கூட்டணி கட்சியினர் வந்த நிலையில் காவல்துறை அவர்களை கடும் கட்டுப்பாட்டுக்குள் அனுமதித்தனர்.

ஆனால் வாழும் கட்சி திமுக வேட்பாளர் செல்வம் வருகையில் அவருடன் தமிழக அமைச்சர் அன்பரசன் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் எழிலரசன், வரலட்சுமி ஆகியோர் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ஆனால் அந்த 100 மீட்டர் எல்லையில் நூற்றுக்கணக்கான திமுகவினர் ஆண் பெண் நிர்வாகிகள் பல்வேறு வாசல் வழியாக காவல்துறை கட்டுப்பாட்டில் மீறி கூடினர்.

வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வந்த பாமகவினர் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை காவல்துறை கண்டு கொள்ளாமல் அப்பகுதியில் இருந்து மெல்ல நழுவி சென்றனர் இருப்பினும் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் பிரச்சாரத்தை இருதரப்பினரும் துவக்கி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்த போது வந்த நபரை மாவட்ட ஆட்சியர் தேர்தல் விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என கூறி அவரை வெளியேற்றிய நிலையில் காவல்துறை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.

Updated On: 25 March 2024 2:15 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  2. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  4. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  5. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  7. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  9. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  10. வீடியோ
    KKR -ஐ கிழித்து தொங்க விட்ட Bairstow ! Master Blaster Chase !...