/* */

பேராசிரியரை கொலை வழக்கில் காவல்துறைக்கு குற்றவாளியை காட்டி கொடுத்த " நெல் மணிகள் " - எஸ்.பி எம்.சுதாகர்

காஞ்சிபுரத்தில் பேராசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில், தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியரை கைது செய்ய, கொலை செய்யப்பட்ட அறையிலிருந்த கிழிந்த பாக்கெட்டில் துணியில் ஒட்டியிருந்த நெல் மணியை வைத்தே குற்றவாளியை போலீஸ் நெருங்கியதாக எஸ்.பி சுதாகர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பேராசிரியரை கொலை வழக்கில் காவல்துறைக்கு  குற்றவாளியை காட்டி கொடுத்த  நெல் மணிகள்  - எஸ்.பி  எம்.சுதாகர்
X

காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் (பைல் படம்)

காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அனிதா. இவர் ஓரிக்கை பகுதியில் உள்ள தனது அக்கா சண்முகக்கனி குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி‌ அனிதா தங்கி இருந்த அறையில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. மாடிக்கு செல்லும் வழி பூட்டப்பட்டிருந்தால் அருகாமையில் உள்ள வீட்டு மாடியில் ஏறி அனிதா தங்கி இருந்த அறைக்கு வந்துள்ளனர்.

அந்த அறை உள்பக்கமாக தாழிடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அனிதா உடலில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்திருந்தார்.

அவர் முகத்தில் காயங்கள் இருப்பதும் அனிதா கொலை செய்யப்பட்டிருக்க கூடும் என்று போலீசார் சந்தேகித்து 3 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தார்கள்

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட அனிதாவின் அறையிலிருந்து ஒரு டீசர்ட்டில் இருந்து கிழிந்த பாக்கெட் ஒன்றை போலீசார் கைப்பற்றினர் அந்த பாக்கெட்டில் நெல்மணிகள் இருந்தது போலீசார் சந்தேகப்பட்டு அவருடைய குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற்றது.

இதில் கொலை செய்யப்பட்ட அனிதாவுடன் ஆரம்ப காலத்தில் பள்ளியில் ஒன்றாக வேலை பார்த்து வந்த உடற்கல்வி ஆசிரியர் சுதாகர் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

சுதாகரின் குடும்பத்தினர் நெல் அரைக்கும் ஆலை ஒன்றை நடத்தி வருகிறார்கள். இதன் அடிப்படையில் சுதாகரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டதில் அனிதாவை கொலை செய்தது தான் என்று சுதாகர் ஒப்புக்கொண்டுள்ளார்

மேலும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் சுதாகரை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சிறு துரும்பும் பல் குத்த உதவும் எனும் பழமொழி போல் சிறிய நெல் மணிகள் கொலை குற்றாவாளியை கண்டுபிடிக்க பெரிதும் காவல்துறைக்கு உதவியுள்ளது.

Updated On: 13 July 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  2. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  5. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  8. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  9. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  10. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’