/* */

'நமது குப்பை நமது பொறுப்பு'என்ற தலைப்பில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு..

காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் துப்புரவு ஆய்வாளர் லட்சுமி பிரியா தலைமையிலான குழுவினர் அரசு பள்ளி மாணவிகளுக்கு குப்பை தரம் பிரிப்பது குறித்து செயல்முறை பயிற்சி அளித்தனர்.

HIGHLIGHTS

நமது குப்பை நமது பொறுப்புஎன்ற தலைப்பில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு..
X

காஞ்சி மாநகரை சுகாதாரமாக வைத்துக் கொள்வேன் எனவும் என் குப்பை என் பொறுப்பு எனும் வாசகத்தை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என உறுதிமொழி ஏற்ற பள்ளி மாணவிகள் 

நமது குப்பை நமது பொறுப்பு என்ற தலைப்பில் குப்பையை தரம் பிரிக்க வழங்குவது குறித்து அரசு மகளிர் பள்ளியில் சுகாதார ஆய்வாளர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சி கடந்த ஓராண்டாகவே 'என் குப்பை என் பொறுப்பு' எனும் வாசகத்தை முன்னிறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படுத்தியும் வீடுகள் தோறும் இது குறித்த பயிற்சிகளும் மாநகராட்சி ஊழியர்களால் அளிக்கப்பட்டு வருகிறது.


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-ன் படி நாள்தோறும் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பொதுமக்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்து வழங்க வேண்டும்.

அவ்வாறு பிரித்து வழங்காத தனி நபர் இல்லங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-ன் படி அபராதம் விதிக்கப்படும் காஞ்சிபுரம் மாநகராட்சியால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுகாதார ஆய்வாளர்கள் பள்ளி மாணவர் மாணவிகளின் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் அந்த வகையில் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பி.எம்.எஸ் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் முன்னிலையில் பள்ளி மாணவிகள் இடையே சுகாதார ஆய்வாளர் லட்சுமி பிரியா குப்பையை தரம் பிரித்து எவ்வாறு கொடுப்பது, டெங்கு போன்ற நோய் ஏற்படாமல் இருக்க கொசு உற்பத்தி ஆகாமல் இருக்க செய்யப்பட வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள், சுகாதாரமான குடிநீர் போன்றவற்றை பள்ளி மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி நம் குப்பை நம் பொறுப்பு என உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

Updated On: 20 July 2023 6:36 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    கடம்பூர் வனத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை...
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய கோடை மழை: ஒரே நாளில் 94.3 மி.மீ பதிவு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  10. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...