/* */

மலையேற்ற வீராங்கனைக்கு காஞ்சிபுரம் மாநகராட்சி துணைமேயர் பாராட்டு

காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் மலையேற்ற வீராங்கனைக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

HIGHLIGHTS

மலையேற்ற வீராங்கனைக்கு காஞ்சிபுரம் மாநகராட்சி துணைமேயர் பாராட்டு
X

மலையேற்ற வீராங்கனைக்கு காஞ்சிபுரம் மாநகராட்சி துணைமேயர் பாராட்டு தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் , ஜோவில்பட்டு பகுதியை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி . இவர் தற்போது மீனம்பாக்கம் பகுதியில் தன் இரு குழந்தைகளுடன் தங்கியிருந்து மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டு இதுவரை மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார்.

முதல் முறையாக ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மலைப்பட்டு கிராமத்தில் உள்ள 155 அடி உயரம் கொண்ட மலை உச்சியிலிருந்து கண்களை கட்டியவாறு இறங்கி சாதனை படைத்தார்.

அதனைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசம் பகுதியில் உள்ள குலு மணாலியில் 165 அடி உயரமுள்ள மலையில் இருந்து முதுகில் தனது குழந்தையை முதுகில் சுமந்து கொண்டும், மற்றொரு குழந்தையை அழைத்து கொண்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிக்க கோரி சாதனை புரிந்தார்.

மூன்றாவது முறையாக 75வது குடியரசு தின பொன்விழாவையொட்டி சுதந்திர போராட்ட வீர மங்கை வேலுநாச்சியார் வேடமணிந்து 3 மணி நேரம் தொடர்ந்து 1389 வில் அம்புகளை எய்து உலக சாதனை புரிந்தார்.

இந்நிலையில் அடுத்த முயற்சியாக எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு முன்பு காஞ்சி கோவில்களில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.இதனை அறிந்த காஞ்சிபுரம் மாநகராட்சி துணைமேயர் குமரகுருநாதன் முத்துலட்சுமியை அழைத்து சால்வை அணிவித்து அவரது இலக்கை அடைய வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த போது , தற்போது நாளொன்றுக்கு இரண்டு மணி நேர கடின பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் பெண்மணி என்ற சாதனையை புரிய ஆவலாக உள்ளதாக தன்னம்பிக்கை மனதைரியம் இருந்தால் குறுகிய காலத்தில் கூட இலக்கை எட்டலாம் என தெரிவித்தார்.

இதற்கான முதல் கட்ட பயிற்சிக்கு ஏப்ரல் 8ஆம் தேதி செல்ல உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து லடாக் பகுதியில் பயிற்சி மேற்கொண்டு உடல் மற்றும் சீதோஷ்ண நிலையை பயிற்சி மேற்கொண்டு இலக்கை நிறைவு செய்வுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர் இளங்கலை கணினி அறிவியல் பயின்றும் , ஜப்பானிய மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள்கள் நான்காவது மற்றும் எட்டாவது வகுப்புகள் பயின்று வருகின்றனர்.

எவரெஸ்ட் உலக சாதனை புரிய 15 லட்சம் ரூபாய் செலவு ஏற்படுவதாகவும், அதனை விளம்பரதாரர்கள் மூலம் பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

Updated On: 23 March 2022 1:42 PM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்