/* */

கார்த்திகை மாவளி விற்பனை 'ஜோர்'

‘மாவளி’ என்னும் பனை மூல பொருட்களில் தயார் செய்யப்படும். அதனை தீ மூட்டி அதனை இரவில் சுற்றும் போது தீப் பொறி பல வடிவில் அழகாக காணப்படும்.

HIGHLIGHTS

கார்த்திகை மாவளி விற்பனை ஜோர்
X

கார்த்திகை மாத தீபத்திருநாள் அன்று மாவளி எனும் அழைக்கப்படும் பொருட்களை தீ மூட்டி சுற்றி மகிழும் சிறுவர்களுக்கான பொருளை வாங்கும் பொதுமக்கள்.

கார்த்திகை மாதம் என்றாலே, ஐயப்ப பக்தர்கள் முதல் நாள் அன்று மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து, ஸ்ரீ ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். மேலும் கார்த்திகை மாதம் கிருத்திகை தினத்தில், தீப திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும்.

'அக்னி தளம்' என அழைக்கப்படும் திருவண்ணாமலையில், கார்த்திகை தீபம் திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். கார்த்திகை தீபம் அன்று, அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டு அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உண்ணாமலை அம்மன் கொடி மரம் அருகே எழுந்தருள, மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு, அதன் பின் சுற்றி உள்ள கிராமங்கள் தங்கள் வீடுகளில் சிறப்பு பூஜை மேற்கொண்டு, அதன் பின் விரதம் முடித்து உணவு அருந்தி ஈசனை வழிபடுபவது வழக்கம்.

நேற்று கார்த்திகை தீபத்தை தொடர்ந்து, இன்று பெருமாள் கார்த்திகை எனப்படும் விழா, அனைத்து பெருமாள் திருத்தலங்களிலும் சொக்கபனை ஏற்றப்பட்டு விழா சிறப்பாக நடைபெறும்.

மேலும், இதே நாளில் பனை மரத்தின் மூலப்பொருள்களில் ஒன்றான பூக்கள் எனப்படும் காய்களை கொண்டு அதனை துகள்கள் ஆக்கி அதனை கொண்டு 'மாவளி' என அழைக்கப்படும் பொருளை உருவாக்கி, பனை மர துண்டுகளில் நடுவில் வைத்து விற்பனை செய்வது, கிராமப்புறங்களில் இன்றளவும் உள்ளது.


இதன் நடுவில் சிறிது கற்பூரம் கொண்டு தீ மூட்டி, அது சிறிது சிறிதாக நெருப்பாகி நிலையில் அதனை சிறுவர்கள் பாதுகாப்புடன் சுற்றும் நிலையில் அதிலிருந்து பறக்கும் தீப்பொறிகள் வட்ட வடிவில் அழகான பல வண்ணங்களையும் பல வடிவங்களையும் பெறும் போது, அதை கண்டு சிறுவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவது வழக்கம்.

இந்நிலையில், கிராமங்களில் மட்டுமே இருந்த இந்த விளையாட்டு தற்போது மெல்ல மெல்ல நகர் புறங்களிலும் கிராம மக்கள் குடி பெயர்ந்த நிலையில், நகரங்களில் நேற்று அதிகளவில் விற்பனைக்கு வந்தது. ஒரு மாவளி 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது இதனை ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்காக வாங்கி சென்றனர்.

இதனை விற்பனை செய்த நபரிடம் இதுகுறித்து கேட்டபோது, கடந்த முறையைக் காட்டிலும் தற்போது விலை 10 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது எனவும், இந்த மாவளி எனப்படும் இப்பொருள் பனை மரத்தின் மூலம் கிடைக்கிறது. பெருமளவில் பனை மரங்கள் தற்போது இல்லாத நிலையில், இந்த மூலப் பொருட்களை சேர்ப்பதில் சற்று கடினம் ஏற்பட்டதாகவும் வரும் காலங்களில் இதுபோன்று நிலை இருக்காது எனவும், பொதுமக்கள் பனை மரத்தின் மீது அதிக அளவில் விழிப்புணர்வு கொண்டுள்ளது இதற்கு பெரிதும் உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 7 Dec 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  2. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  3. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  4. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  5. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  6. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  7. வானிலை
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? இதோ சில...
  8. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  9. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  10. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...